Monday, March 19, 2012

களத்தில் குதித்தார் ஹிலாரி கிளிண்டன்! அதிர்ச்சியில் சிறிலங்கா- அடுத்த கட்டம் என்ன?

ஐ.நா மனித உரிமைச் சபையில் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணை தொடர்பில், அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்டனைச் சந்திப்பதற்கு, சிறிலங்காவின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் முயற்சிகளை மேற்கொள்வதாக, ஆங்கில ஊடகமொன்றின் செய்தியினை மேற்கோள்காட்டி வெளிவந்துள்ள செய்தியின் பின்னணி குறித்து, Tamil News Circle செய்திச் சேவைக்கு கிடைத்த தகவல்களை தொகுப்பாக தருகின்றோம்:
சிறிலங்கா தொடர்பில் ஐ.நா மனித உரிமைச் சபையில் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணைக்கு ஆதரவாக, 22 நாடுகள் ஆதரவாக வாக்களிக்கும் நிலை தற்போது உள்ளது.

மனித உரிமைச் சபையில் அங்கத்துவம் வகிக்கின்ற மொத்தம் 47 நாடுகளில், லிபியாவுக்கான வாக்களிக்கும் தகமை தற்காலியமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், 46 நாடுகளே வாக்களிக்கும் தகமையைப் பெற்றுள்ளன.

இந்நிலையில் தற்போது 22 நாடுகள் குறித்த பிரேரணைக்கு ஆதரவளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதா தெரிவிக்கப்படும் சூழலில், அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்டன் இவ்விவகாரத்தை நேரடியாக கையாள்வதற்கு, தற்போது களத்தில் குதித்துள்ளதாக நம்பகமான செய்திகள் தெரிவித்துள்ளன.

குறிப்பாக சிறிலங்கா அரசாங்கத்தின் ஆசீர்வாதத்துடன், தென்னிலங்கையில் மேற்கொள்ளப்பட்ட அமெரிக்க எதிர்ப்பு ஆர்பாட்டங்கள், அமெரிக்க இராஜாங்க திணைக்களத்துக்கு சினத்தை ஏற்படுத்தியிருந்ததோடு, அமெரிக்க எதிர்ப்பு ஆர்பாட்டங்களுக்கு முஸ்லிம் மக்களை, சிறிலங்கா பாவித்தமை அமெரிக்காவுக்கு கோபத்தை அதிகரித்ததாக அறியமுடிகின்றது.

இந்நிலையிலேயே, அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்டன், கீழ் நிலை இராஜாங்க மட்டத்தில் இருந்த சிறிலங்கா தொடர்பிலான பிரேரணை விவகாரத்தை, தற்போது கையில் எடுத்துள்ளதாக அறியமுடிகின்றது.

அமெரிக்காவின் பிரேரணைக்கு எதிராக சிறிலங்கா மேற்கொண்ட சகல விடயங்களை உன்னிப்பாக கவனித்துள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம், சிறிலங்காவுக்கு இவ்விவகாரத்தில் ஐ.நா மனித உரிமைச் சபையில் கடுமை அதிர்சியைக் கொடுப்பதற்கு தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இத்தகைய சூழிலிலேயே, சிறிலங்காவினுடைய வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்டனைச் சந்திப்பதற்குரிய முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

சிறிலங்கா அரசாங்கத்தின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து, ஐ.நா. மனித உரிமைச் சபைக் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னரே வொஷிங்டன் வருமாறு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸுக்கு, ஹிலாரி கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.

இருப்பினும் குறித்த இந்தக் கடிதத்துக்கு ஜீ.எல்.பீரிஸ் பதிலளிக்கவில்லை நிலையில், தற்போது சிறிலங்கா அரச தரப்பால் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்டனைச் சந்திப்பதற்கு எடுக்கப்படும் முயற்சிகள், கைகூடுவதற்குரிய வாய்ப்புக்கள் குறைவென்றே தெரியவருகின்றது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.