Wednesday, March 21, 2012

கேணல் ரமேஷ் கொலை: புதிய புகைப்படங்கள் வெளியானது !

கேணல் ரமேஷ் இலங்கை இராணுவத்திடம் 2009ம் ஆண்டு மே மாதம் சரணடைந்தார். அவரை இலங்கை இராணுவம் விசாரணை செய்யும் வீடியோக் காட்சிகள் ஏற்கனவே வெளியாகியிருந்தது. இந் நிலையில், புலிகளின் மூத்த தளபதியான கேணல் ரமேஷ் அவர்கள் தலையில் அடித்துக் கொல்லப்பட்ட மேலதிகப் புகைப்படங்கள் கிடைத்துள்ளது. ரமேஷ் உடலத்தில் தலையிலும் இடதுபக்க கைகளிலும் கடுமையா ரத்தம் காணப்படுவது இப் புகைப்படத்தில் பதிவாகியுள்ளது.

இலங்கை அரச படைகளின் சிப்பாய் ஒருவரால் கொடுக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் இப் புகைப்படத்தில், அரச படைகளின் முகங்களும் மறைக்கப்படுள்ளமை குறிப்பிடத்தக்க விடையமாகும்.










காணொளியில் சாதாரண உடையில் இருந்த ரமேசிடம் இரணுவ உடைகளை அணுயுமாறு பலவந்தப்படுத்திய சிறீலங்கா படையினர் அதன் பின்னர் அவரை படுகொலை செய்துள்ளனர்.

மூன்று பிள்ளைகளின் தந்தையான ரமேஸ் விடுதலைப்புலிகள் அமைப்பின் சிறப்புத் தளபதியாக பணியாற்றியிருந்தார். அவர் 1986 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்திருந்தார்.

ரமேசிடம் விசாரணைகளை மேற்கொண்ட சிறீலங்கா படையினரின் அடையாளங்கள் காணொளியில் தெளிவாக காணப்படுகின்றன.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.