Monday, March 05, 2012

நோர்வே திரைத்துறையினருக்காக திரையிடப்பட்ட ‘உச்சிதனை முகர்ந்தால்’!

நோர்வேயில் இருக்கும் திரைத்துறையினர் பலரும் பார்க்கும் விதமாக கடந்த 29 ஆம் நாள் (29.02.2012) பேர்கன் நகரில் உச்சிதனை முகர்ந்தால் திரைப்படம் திரையிடப்பட்டது. இதன்பொழுது நோர்வேஜிய திரைத்துறையில் பங்காற்றும் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள், திரைப்பட வெளியீட்டாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர். “Bergen+Kollwood” என்று பெயரிடப்பட்ட இந்நிகழ்வை “Vestnorsk Filmsenter” (Western Norway Film Center) என்ற திரைப்படத்துறையினரை இணைக்கும் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது.

உச்சிதனை முகர்ந்தால் திரைப்படத் தயாரிப்பாளர்கள் (Global Media & Entertainment AS) சார்பாக ஸ்டீபன் புஸ்பராஜா, சிவகணேசன் தில்லையம்பலம், பஞ்சகுலசிங்கம் கந்தையா, சிறி பாலசுந்தரம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில், இரண்டு நோர்வேஜிய குறும்படங்களும் திரையிடப்பட்டது. திரைப்பட திரையிடலுக்கு முன்பு தயாரிப்பாளர்களை பற்றின அறிமுக நிகழ்வு நடந்தேறியது. அதன்பொழுது நோர்வே நிறுவனம் இந்தியாவில் முழு நீளத்திரைப்படம் தயாரித்ததை எண்ணி மகிழ்ச்சியும் பாராட்டுக்களும் தெரிவிக்கப்பட்டது.

திரையிடலுக்கு பின்பு பொதுமக்கள் மற்றும் திரைத்துறையினருக்கும் உச்சிதனை முகர்ந்தால் தயாரிப்பாளர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் நிகழ்வும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. அதன்பொழுது, இப்படியான திரைப்படம் தயாரிக்கப்பட்டதற்கான நோக்கம், வெளியீடு, வெற்றிஃதோல்வி, வருங்கால முயற்சி தொடர்பாக பலவிதமான கேள்விகள் கேட்கப்பட்டு அதற்கு தயாரிப்பாளர்கள் பதிலளித்தனர்.

இதில் முக்கியமாக இந்தியாவின் மிகப்பெரிய துறைகளில் ஒன்றான தென்னிந்திய திரைத்துறையில் கால்பதிக்கும்பொழுது நேர்ந்த சிரமங்கள், ஒத்துழைப்புகள், பங்களிப்புகள் தொடர்பான கேள்வியையும் பலரும் ஆர்வமுடன் கேட்டு விவரங்களை தெரிந்துகொண்டனர். வருங்காலத்தில் நோர்வேஜிய திரைத்துறையும் தென்னிந்தியத் திரைத்துறையும் ஒன்று சேர்ந்து பணியாற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பான விவாதமும் அதன் சாதக பாதகங்களும் விவாதிக்கப்பட்டு, அதற்கான முயற்சியில் புடழடியட ஆநனயை ரூ நுவெநசவயinஅநவெ யுளு நிறுவனம் எந்தளவிற்கு ஈடுபடும் என்றும் கேள்விகள் கேட்கப்பட்டது.

 எங்கள் நிறுவனம் இதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் பல நல்ல தரமான திரைப்படங்களை இவ்வுலகிற்கு தமிழ் பேசும் மொழி மூலம் வழங்குவதே எங்கள் நிறுவனத்தில் நோக்கம் எனவும் நாங்கள் தெரிவித்தபொழுது அனைவரும் அதனை பெரிதும் பாராட்டியதுடன் அம்முயற்சிக்கு நோர்வேஜிய திரைத்துறை சார்பில் அனைத்துவிதமான உதவிகளையும் செய்யத் தயாராக இருப்பதாக வாக்குறுதி அளிக்கப்பட்டது.
திரைப்படத்தில் பல இடங்களில் இந்திய தணிக்கைத் துறையினரின் அனுமதி மறுப்பு பகுதிகள் தொடர்பாக நோர்வேஜியர்கள் மிகுந்த ஆச்சரியமும் ஒரு சிலர் அதிர்ச்சி அடைந்ததாகவும் மற்றும் சிலர் கோபம் கொண்டதாகவும் கூறினர். இப்படத்தில் மறைப்பதற்கும் மறைக்கப்படுவதற்கும் என்ன இருக்கிறது என்று தங்களுக்கு விளங்கவில்லை என்றும் தெரிவித்தனர்.

இந்தத் திரைப்படத்தை இந்திய திரையரங்குகளில் திரையிடுவதற்கு ஏற்பட்ட சிரமங்களை தயாரிப்பாளர்கள் எடுத்தியம்பினர். இலங்கையில் போராட்டகாலத்தில் தமிழ்மக்களுக்கு ஏற்பட்ட பல துயரச்சம்பவங்களில் இதுவும் ஒரு உண்மைச் சம்பவம் என்பதை தயாரிப்பாளர்களால் விளங்கப்படுத்துப்பட்டது.

படத்தைப்பார்த்தவர்களின் விமர்சனம் மிகவும் நன்றாக இருந்தது. இந்தப் படம் மேலும் பல ஐரோப்பிய நாடுகளில் காண்பிக்கப்பட வேண்டும் என்ற வேண்டுகோளையும் முன்வைத்தனர். இந்நிகழ்வு தொடர்பாக தயாரிப்பாளர்களுடனான பேட்டி மற்றும் செய்திகளையும் சில காணொளிப் பகுதிகளையும் நோர்வேஜிய தேசியத் தொலைக்காட்சி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.