Sunday, March 04, 2012

கடற்படையும், தமிழ் அமைச்சரும் உல்லாசம்! நிர்க்கதியான பொதுமக்கள்!!

கச்சதீவு வருடாந்த திருவிழாவில் கலந்து கொள்ளச்சென்ற தமிழ் மக்களை நிர்க்கதியாக விட்டு, தென்பகுதியிலிருந்து தமது குடும்பங்களை அழைத்து வந்து கடற்படையினர் உல்லாசமாக இருந்ததோடு பாராமுகமாக செயற்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

நேற்று காலையில் நெடுந்தீவில் பாடசாலை மாணவியான சிறுமி கொலை செய்யப்பட்டதைக்கண்டித்து நெடுந்தீவு மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதோடு தமது படகுச்சேவைகளையும் முற்றாக நிறுத்தினார்கள்.

இதனால் கச்சதீவிலிருந்து நெடுந்தீவு சென்று வரவேண்டிய பயணிகள் படகு இல்லாமையால் இடைநடுவில் அங்கலாய்த்துக்கொண்டிருந்தனர்.

குறிப்பாக தென்பகுதியிலிருந்து கடற்படையினரதும் இராணுவத்தினரதும் குடும்பத்தினர் அழைத்துவரப்பட்டு அவர்கள் கடற்படையினரது படகுகளில் சுற்றிக்காட்டப்பட்டதோடு மீண்டும் யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வரப்பட்டனர்.

ஆனால் தமிழ் மக்கள் தொடர்பாக அவர்கள் எந்தவிதமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லையென பொது மக்கள் குற்றஞ்சாட்டினார்கள்.

குறிப்பாக திருவிழாவிற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியென்று ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் இச்சம்பவத்தால் பலர் யாழ்ப்பாணம் திரும்புவதற்கு கடும் சிரமப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை தமிழ் அமைச்சரான டக்ளஸ் தேவானந்தாவும் தனது பரிவாரங்களுடன் வருகை தந்து காலை முதல் மாலை வரை வெயிலில் நின்ற மக்களுடன் எதுவும் பேசாது படகில் ஏறிப் புறப்பட்டுவிட்டார்.

அதன் பின்னர் வருகை தந்த ஈ.பி.டி.பியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் கமலேந்திரன் வந்து கடற்படையினரின் படகில் ஏறிக் கச்சதீவுக்குப் புறப்பட்டார்.

இவ்வாறு அவர்கள் ஆளுக்கொரு பக்கமாகக் கச்சதீவு செல்ல, கடும் வெயிலில் வாடி நின்ற மக்கள் ஏமர்ந்து ஒருவரையொருவர் தங்களது முகங்களைப் பார்த்து நின்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது.





 

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.