
அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் செயல்பட்டு வரும், அரசியல் கொள்கைகள் பற்றிய ஆய்வு நிறுவனமான, "புரூக்கிங்ஸ் இன்ஸ்டிடியூஷன்' நிர்வாக இயக்குனர் வில்லியம் ஜே அந்தோலிஸ் இதுகுறித்து ஒரு கட்டுரையில் எழுதியிருப்பதாவது :
முதல்வர் ஜெயலலிதா மிகக் கூர்மையான அறிவுடையவராக உள்ளார். அதோடு, கடினமான கேள்விகளை எதிர்கொள்வதன் மூலமும், விரைவான முடிவெடுப்பதிலும் தன் திட்பத்தை வெளிப்படுத்தியவர்; விவேகம் உள்ள நிர்வாகி. அவர் ஒரு தொழில்நுட்ப அறிஞர் அல்ல என்றாலும் கூட, அரசியல் மற்றும் கொள்கை பற்றிய விவாதங்களை சீர்தூக்கிப் பார்த்து முடிவெடுப்பவர். இன்றைய தமிழக அரசியல் பற்றி ஒரு படம் எடுத்தால் அதற்கு, "ஸ்டார்வார்ஸ் 3 - திருப்பியடிக்கும் ஜெயலலிதா' என தலைப்பு கொடுக்கலாம். அவர் மேற்கொள்ளும் முடிவுகள், நாடகம் போல பரபரப்பாக இருக்கும் பட்சத்தில், அவை தமிழக வளர்ச்சிக்கு மோசமான விளைவுகளைத் தான் தரும். ஆனால், உண்மையில் அவர் அப்படி அல்ல. அவர் நிர்வாகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதில், தீர்க்கமான உறுதியுடன் உள்ளார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதியால் ஏற்பட்ட நிதிப் பற்றாக்குறையை சரிக்கட்டுவதில், அவர் இப்போது தீவிர கவனம் செலுத்தி வருகிறார். அதோடு, அரசு கஜானாவை வற்ற வைக்கும் மானியங்களைத் தொடர்வதுடன், அதனால் ஏற்படும் பிரச்னைகளை கையாளுவதிலும் சிறப்பாக செயல்படத் துவங்கி விட்டார். கடந்த 2011ல், பஸ் மற்றும் பால் விலையை உயர்த்தியதன் மூலம், பலரையும் அதிர்ச்சி அடைய வைத்தார். மாணவர்களுக்கு மடிக் கணினி வழங்குவது உள்ளிட்ட பல திட்டங்கள் மூலம், தமிழகத்தின் கல்விக்கான செலவை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளார். அவரது அடுத்த சவால், தமிழகத்தின் உட்கட்டமைப்பு பற்றாக்குறை தான். அவர், தனது இந்த மூன்றாவது ஆட்சியில், நல்ல நிர்வாகத்தைக் கொடுக்க வேண்டும் என்றால், அதற்காக, இந்திய அரசியல் தலைவர்கள் சிலர் செய்த, நல்ல காரியங்களை, அவர் செய்ய வேண்டும். அவர் தனது கட்சியிலும், மாநில அதிகார வர்க்கத்திலும், தனது செல்வாக்கை நிலை நிறுத்துவதற்கு, சில கடினமான கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டும், என்றார்.
நன்றி : தினமலர்
நன்றி : தினமலர்
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.