Saturday, March 03, 2012

முடியவில்லை எம் விடுதலை வீச்சு அதுவே எங்களின் மூச்சு - ஜெனீவாவை அண்மிக்க என்னும் 35 கிலோமீற்றர் தூரங்களே உள்ளது.


நிரந்தர விடிவிற்காகவும் நிம்மதியான வாழ்விற்காகவும் ஏங்கித் தவிக்கும் ஈழத்தமிழர்களுக்கு சர்வதேச சமூகம் நீதியான தீர்வு ஒன்றினைப் பெற்றுத்தர வேண்டும் என்று ஆரம்பிக்கப்பட்ட நீதிக்கான நடைப்பயணம் ஜெனீவாவை அண்மிக்க என்னும் 35 கிலோமீற்றர் தூரங்களே உள்ளது.
எதிர்வரும் திங்கட்கிழமை ஐநா சபை முன்றலில் முடிவடைகின்ற இந்த நீதிக்கான நடைப்பயணத்தில் புலத்தில் வாழ்கின்ற தமிழ் உறவுகள் அனைவரும் ஒன்று கூடி நீதி கேட்பதற்கு சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. இதில் அனைத்து தமிழ் மக்களும் கலந்துகொள்வதற்கான பயண ஏற்பாடுகள் அந்தந்த நாட்டில் உள்ள தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினரால் மேற்கொள்ளப்படுகிறது.

எனவே தமிழினம் தன்மானத்தோடு தலைநிமிர்ந்து வாழ்வதற்கு சர்வதேசத்தின் சாதகமான பதில் எமக்கு வேண்டும் என்று உரிமையுடன் கேட்பதற்கு அனைவரும் வருகைதரவேண்டும்.

ஈழத்தமிழர்களின் அவலங்களை அகற்றுவதற்கு அகிம்சை முதல் ஆயுதப் போராட்டம் வரை முன்னெடுக்கப்பட்டது. ஆனால் சிங்கள அரசு எம்மினத்தை அழித்து இன்றும் அடக்கு முறைக்குள்ளேயே வைத்துள்ளது. சொந்த மண்ணில் சுதந்திரமாக வாழ முடியாமல் தமிழினம் தத்தளிக்கிறது.

இந்நிலையில் சர்வதேச சமூகம் தீர்வு ஏதாவது பெற்றுத்தரும் என்ற எதிர்பார்ப்புடன் இருந்த தமிழ் மக்கள் பலமுறை ஏமாற்றப்பட்டனர். இன்று சிங்கள அரசின் இன அழிப்புக் குறித்த விடயங்கள் அனைத்தும் அம்பலமாகி இருக்கின்ற சூழ்நிலையில் உண்மைகளை சர்வதேச சமூகம் அறிந்திருக்கின்ற இத்தருணத்தில் நாமும் எல்லோரும் ஒன்றுதிரண்டு சர்வதேச சமூகமே உன் மௌனத்தை கலைத்து எம்மினத்திற்கு நியாயமான தீர்வினை பெ,ற்றுத்தருவதற்கு விரைந்து செயற்படு என்று கேட்போம். எதிர்வரும் திங்கட்கிழமை நீங்கள் வருகை தரவேண்டும் என்று வரலாறு வரவழைக்கிறது.

வித்தாகிப் போன எம் மாவீரர்களின் கனவுகளை நனவாக்கவும் எமது விடுதலைப் போராட்டம் முடிந்துவிட்டதாக தம்பட்டம் அடிக்கும் சிங்கள அரசிற்கு சாவு மணியடிக்கவும் வாருங்கள், முடியவில்லை எம் விடுதலை வீச்சு அதுவே எங்களின் மூச்சு என்பதை உலகிற்கு உணர்த்துவோம் ஒன்றாய் வாரீர்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.