Thursday, February 09, 2012

கூட்டமைப்பைப் பலவீனப்படுத்த பிள்ளையானை ஏவும் அரசு!

தமிழ் மக்களுக்கான தீர்வுத் திட்டம் தொடர்பில் கடந்த ஒரு வருட காலத்துக்கு மேலாக அரச தரப்புக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமிடையில் பேச்சுக்கள் இடம்பெற்று வந்தன.

இந் நிலையில் தற்போது அரசுக்கும் கூட்டமைப்புக்குமிடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அதனையடுத்து அரசாங்கம் தமிழ் தேசிய கூட்டமைப்பை பிரிப்பதற்கு பல நடவடிக்கை எடுத்து வருகின்றது. இதன் ஒரு பகுதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையானை அரசாங்கம் பயன்படுத்தி வருகின்றது.

இவ்வருடம் பங்குனி மாதம் நடைபெறவிருந்த மட்டக்களப்பு மாவட்டத்தின் உள்ளுராட்சி தேர்தல்கள் கிழக்கு மாகாண முதலமைச்சரின் ஜனாதிபதியால் அடுத்த வருடத்துக்கு பின்போடப்பட்டுள்ளது.

ஏனெனில் மட்டக்களப்பு மாநகரசபை அரசாங்க கட்சியிலும் களுவாஞ்சிக்குடி, ஆரையம்பதி, பட்டிப்பளை, வெல்லாவெளி, வவுணதீவு, செங்கலடி, வாழைச்சேனை, வாகரை ஆகிய பிரதேச சபைகள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பில் உள்ளது.

இவ்வேளை அண்மையில் ஜனாதிபதியின் சகோதரன் பசில் ராஜபக்ச கிழக்கு மாகாண முதலமைச்சர் சந்திரகாந்தன் (பிள்ளையானை) சந்தித்து அவருக்கு கொடுத்துள்ள சதி செயற்பாடே தமிழ் தேசிய கூட்டமைப்பை அவர்கள் வழியில் செல்வதாக சென்று பிரிக்கும் நடவடிக்கையாகும்.

பிரதேச சபை தேர்தல் பின்போடல் சார்பாக பிள்ளையான் பசில் ராஜபக்ச கூறிய விடயம் யாதெனில் தற்போது மட்டக்களப்பு மக்களை ஓரளவு மாற்றிவிட்டேன். மேலும் தமிழ் தேசிய கூட்டமைப்பை ஒரு விதமாக பிரிக்கும் போது மக்கள் அவர்களில் நம்பிக்கை இழப்பர் இதன் பின் அடுத்த வருடம் தேர்தல் நடாத்தினால் மக்கள் அனைவரும் எங்கள் பக்கம் திரும்பி விடுவர் என கூறியுள்ளனர்.

ஆனால் கடந்த பல காலமாக தமிழ் தேசிய கூட்டமைப்பையும், வட மாகாண மக்களையும் விமர்சிக்கும் பிள்ளையான் சுவிஸ் நாட்டில் கிழக்கின் உதயம் என்னும் கிழக்கு தனித்துவம் கோரும் அமைப்பை உருவாக்கியுள்ளார்.

சுவிஸ் நாடு சென்று மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த கிழக்கின் உதயம் அமைப்பு பிரதிநிதிகளே ஏற்பாட்டை சுவிஸ் நாட்டில் மேற்கொண்டுள்ளனர்.

பிள்ளையானின் பிரதிநிதிகளும் மட்டக்களப்பை சேர்ந்த சில ஊடகவியலாளர்களும் சந்தித்துள்ளனர். பெரும்பாலான மட்டக்களப்பு மக்கள் பிள்ளையானை சந்திக்க விரும்பவில்லை. பொதுவாக பிள்ளையானின் சதி செயற்பாட்டு நடவடிக்கை இது என கருத்து தெரிவிக்கின்றனர்.

இக் கிழக்கின் உதயம் அமைப்பு அண்மைக் காலமாக சுவிஸில் நிதி சேர்த்து பிள்ளையானுக்கு வழங்கி கிழக்கு மாகாணத்தில் பிள்ளையானுடன் இணைந்து வறிய மாணவர்களுக்கு கல்வி உபகரணம் வழங்கும் நிகழ்வை மேற்கொண்டதை சகலரும் அறிவர்.

அது மட்டுமின்றி சுவிஸ் நாட்டிலும், டென்மார்க் போன்ற நாட்டிலும் பல ஹோட்டல்கள் உட்பட பல சொத்துக்கள் இவரது அபிமானிகளின் பெயரில் பிள்ளையானால் விலைக்கு வாங்கப்பட்டுள்ளது.

மேலைநாடுகள் பலவற்றில் பல கோடிக்கணக்கான சொத்துக்கள் பிள்ளையானுக்கு உண்டு. இவை பிள்ளையானின் பெயரில் இல்லை. அவரது அன்பர்களின் பெயரில் உண்டு. தமது சொத்தை பற்றி பார்வையிடுவதற்கும் ஆராய்வதற்குமே பிள்ளையான் சுவிஸ் நாட்டுக்கு சென்றதுடன், தமிழ் தேசிய கூட்டமைப்பை பிரிப்பதற்கு அரசாங்கம் கொடுக்கும் இராஜதந்திர செயற்பாட்டை மேற்கொள்ளவும் இவ் விஜயம் அமைந்தது.

அண்மைக்கால மட்டக்களப்பு மாவட்டத்தின் கொலைகள், கொள்ளைகள் போன்றவற்றில் தொடர்புபட்டவராக அரசாங்கம் அறிந்தும் இவரை கூப்பிட்டு கதைத்து விட்டு அரசாங்கத்துக்கு ஆதரவாக செயற்படுமாறும், தமிழ் தேசிய கூட்டமைப்பை பிரிக்குமாறும் கூறியுள்ளது.

அத்தோடு பிள்ளையானிடம் ஆயுதக்குழு இருப்பதற்கும் இதுவரை அரசாங்கம் அனுமதித்துள்ளது. இதன் முக்கிய நோக்கம் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சிலரை சந்தரப்பம் பார்த்து சுழிப்பதற்கு ஆகும்.

இவ்வேளை பிள்ளையான் தனது சொத்துக்கள் மற்றும் டென்மார்கில் உள்ள தனது மனைவி பிள்ளை போன்றவற்றை பார்வையிடுவதற்கும், வெளிநாடுகளில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு புலம்பெயர் தமிழ் மக்களிடம் உள்ள அபிமானத்தை குறைப்பதற்குமே இவ்விஜயத்தை மேற்கொண்டுள்ளனர்.

இதுதான் உண்மை. அரசாங்கம் பிள்ளையானை வைத்து தமிழ் கூட்டமைப்பை பலவீனப்படுத்த ஏற்படுத்தும் சதி விலையில் புலம்பெயர் தமிழர்களும், தமிழ் தேசிய கூட்டமைப்பும் அவதானமாக இருக்க வேண்டும் என கிழக்கு மாகாண மக்கள் கோருகின்றனர்.

பிள்ளையானின் நடவடிக்கை சார்பான விடயங்கள் பிள்ளையானுடன் இணைந்துள்ள அவரது நண்பர்கள் மூலம் கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.