Thursday, February 16, 2012

அரந்தலாவ பிக்குகள் கொலை!- பொட்டம்மானே செய்தார் - தான் அல்ல என்கிறார் முரளிதரன்!

தனது கட்டளையின்படி அரந்தலாவ பிக்குகள் கொலை செய்யப்படவில்லை எனவும் விடுதலைப்புலிகளின் புலனாய்வு பிரிவுக்கு பொறுப்பாக இருந்த பொட்டம்மானின் கட்டளையின்படியே இந்த பிக்குகள் கொலை செய்யப்பட்டதாக புலிகளின் முன்னாள் முக்கிய தளபதிகளில் ஒருவரும், தற்போதைய இலங்கை அரசாங்கத்தின் பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். பொட்டம்மான் உள்ளிடோரே அரந்தலாவ பிரதேசத்தில் பிக்குகளை கொலை செய்தனர். இநத தாக்குதலுக்கு 6 பேர் கொண்ட சிறிய குழு சென்றுள்ளது. நான் அப்போது தொப்பிகல பிரதேசத்திற்கு பொறுப்பான தலைவராக இருந்தேன்.

கடற்புலிகளுக்கும், புலனாய்வு பிரிவினருக்கும் பொட்டம்மானே நேரடியாக கட்டளைகளை வழங்கினார். ஆயுதப்படைகளை அவர் கட்டுப்படுத்த முடியாது. எது எப்படி இருந்த போதிலும், பிரபாகரன் மற்றும் தமிழ்ச் செல்வன் போன்றவர்களும், பொட்டம்மானின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

 பின்னர் அவர் யாழ்ப்பாணத்திற்கு அழைக்கப்பட்டு, தண்டனை வழங்கப்பட்டது. அதன் பின்னரே என்னை கிழக்கு மாகாண தலைவராக நியமித்தனர் எனவும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.