Thursday, February 16, 2012

போர்க்குற்ற விசாரணைகளிலிருந்து தப்பிக்க முயலும் தந்திரமே இலங்கையரசின் இராணுவ நீதிமன்ற நாடகம்! மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவிப்பு!

போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அனைத்துலக விசாரணைகளை திசை திருப்பவே இராணுவ நீதிமன்றத்தினை இலங்கை நியமித்துள்ளதாக, மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

ஆணைக்குழுவின் அறிக்கையில் பொதுமக்களுக்கு ஏற்பட்ட இழப்புகள் தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பாக விசாரிக்க இராணுவ நீதிமன்றம் ஒன்றை நியமித்துள்ளதாக இலங்கை இராணுவத் தளபத் ஜெகத் ஜெயசூரிய நேற்று முன்தினம் அறிவித்திருந்தார்.
இது குறித்து நியுயோர்க்கைத் தளமாகக் கொண்டு இயங்கிவரும் அனைத்தலக மனித உரிமைகள் கண்காணிப்பகம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.

அவ அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் கொண்டு வரப்படுவதற்குச் சாத்தியமுள்ள சூழலில், மற்றொரு அர்த்தமற்ற நகர்வை இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. என்று மனிதஉரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்திய பணிப்பாளர் பிரட் அடம்ஸ் தெரிவித்துள்ளார்.

இந்த இராணுவ நீதிமன்றத்தை நியமித்துள்ள இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய, போரின் இறுதி ஆண்டுகளில் போர் வலயமான வன்னிப் பகுதிக்குப் பெர்றுப்பான தளபதியாக இருந்தவர்.

ஒட்டுமொத்த போரின் திட்டமிடல் மற்றும் நடவடிக்கைகளில் அவர் முழுமையாகத் தொடர்புபட்டிருந்தவர். அவ்வாறான ஒருவரால் நியமிக்கப்பட்டுள்ள இராணுவ நீதிமன்றத்தில் அங்கம் வகிக்கும் இராணுவ அதிகாரிகளால், தமது நண்பர்களான சக அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட மோசமான மீறல்கள் குறித்து உண்மையை கண்டறியும் நடுநிலையான- சுதந்திரமான விசாரணைகளை மேற்கொள்ள முடியும் என்று எதிர்பார்க்க முடியாது என்றும் அடம்ஸ் மேலும் கூறியுள்ளார்.

அத்துடன் அரசுக்கு ஆதரவான உறுப்பினர்களைக் கொண்ட விசாரணைக் குழுக்களை நியமிக்கும் நீண்ட வரலாற்றை இலங்கை கொண்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.