Thursday, February 23, 2012

விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் அமெரிக்கா : சீற்றத்தில் சிறீலங்கா

பிரித்தானிய நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற “சிறிலங்காவின் மனிதஉரிமைகள்“ என்ற தலைப்பிலான விவாதத்தின் முடிவில் பதிலளித்து பேசிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

“ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராகக் கொண்டு வருவதற்கான தீர்மானம் ஒன்றை அமெரிக்கா தயாரித்து வருவது குறித்து நாம் அறிவோம். அத் தீர்மானத்திற்கு நாம் ஆதரவு வழங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுகின்றது.” என அவர் தெரிவித்துள்ளார்.

சிறீலங்கா மீதான பிரேரனை ஒன்றை கொண்டு வருவதில் அமெரிக்கா கடும் முயற்சியுடன் செயற்பட்டு வருவதே தெரிந்ததே.

அமெரிக்கா தலைமையிலான அதன் நட்பு நாடுகளே இவ்வாறு சதி நடவடிக்கையில் ஈடுபட்டுவருவதாக சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவினால் முன்னெடுத்து வரும் பிரச்சார நடவடிக்கைகள் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளுக்கு வலுச் சேர்க்கும் முகமாக உள்ளதாக வெளிவிவகார அமைச்சு தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.
சிறீலங்காவின் நிலைப்பாடு தொடர்பில் உறுப்பு நாடுகளுக்கு தெளிவுபடுத்த வேண்டிய அவசியம் எழுந்துள்ளதாகக் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் தீர்மானம் நிறைவேற்றுவது குறித்து சிறீலங்காவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் எந்தவிதமான இணக்கப்பாடும் ஏற்படுத்திக் கொள்ளப்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ளது.

ஐக்கிய நாடுகளின் ஜெனீவாவிற்கான சிறீலங்கா பிரதிநிதி தமராகுணநாயகம் இது தொடர்பில் உறுப்பு நாடுகளுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.

சிறீலங்கா அரசாங்கமோ அல்லது ராஜதந்திரிகளோ ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை தீர்மானம் தொடர்பில் அமெரிக்கப் பிரதிநிதிகளுடன் எவ்வித தொடர்பையும் பேணவில்லை என திட்டவட்டமாக தமராகுணநாயகம் தெரிவித்துள்ளார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.