Wednesday, February 15, 2012

மாலைதீவுக் கடற்பரப்பில் இந்தியப் போர்க் கப்பல்!

மாலைதீவில் தற்போது ஏற்பட்டுள்ள கிளர்ச்சியை அடுத்து அங்கு இந்தியாவின் தலையீடு ஏற்படலாம் என்று அவதானிகள் தெரிவிக்கின்றனர். அதற்கு முன்னோடியாக இந்திய விமானம் தாங்கிக் கப்பல் மாலைதீவை நோக்கி விரைந்துள்ளது.

மாலைதீவில் உருவாகியுள்ள அரசியல் பிரச்சினை கிளர்ச்சியாக தீவிரமடைந்துள்ள நிலையில் அதில் தலையிடுவதற்கு இந்திய அரசின் பாதுகாப்புச் சபை ஏற்கனவே தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தத் தீர்மானம் மேற்கொள்வதற்கு முன்னர் இந்தியப் பாதுகாப்புத் துறையின் உயர் மட்டத்தினர் மற்றும் அமெரிக்க அரசின் உயர் மட்டத்தினரிடையே நீண்ட நேரமாக பேச்சுக்கள் இடம்பெற்றதாக தெரிய வருகிறது. இந்தச் பேச்சுக்களையடுத்து இந்தியப் பிரதமர் கலாலநிதி மன்மோகன் சிங் தலைமையில் பாதுகாப்புச் சபை கூடியுள்ளது.

இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் அந்தோணி, தேசிய பாதுகாப்புத் துறை ஆலோசகர் சிவசங்கர் மேனன், முப்படைகளின் தளபதிகள், மற்றும் பாதுகாப்புப் பிரிவின் சிரேஸ்ர அதிகாரிகள் இதில் பங்கேற்றிருந்தனர். இந்த மந்திராலோசனையை அடுத்து மறுநாள் அதிகாலையே விமானம் தாங்கிக் கப்பல் மாலைதீவுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளது என்று கூறப்படுகிறது.

ஒரு மணி நேரத்தில் மாலைதீவை சென்றடையக் கூடிய தூரத்தில் இந்தக் கப்பல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதே வேளை அங்கு தலைதூக்கியுள்ள அடாவடித்தனங்களை அடக்கிவிடுமாறும் இந்திய அரசு மாலைதீவு அதிகாரத் தரப்புக்கு அறிவுறுத்தியுள்ளது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.