Sunday, February 26, 2012

முல்லைத்தீவில் இந்திய மீனவர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த வருமாறு மக்களை வற்புறுத்தும் இராணுவம்

ஜெனிவாவில் மனித உரிமைகள் பேரமர்வில் இலங்கைக்கு எதிராக உலகநாடுகள் தீர்மானம் நிறைவேற்ற இருக்கின்ற நிலையில் இலங்கை அரசாங்கம் தமிழர் பகுதிகளில் ஐ.நாவுக்கும் அமெரிக்காவிற்கும் எதிராக ஆர்ப்பாடங்களை நாளை நிகழ்த்த தமிழ் மக்களை பயன்படுத்த பொய்பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றது.

வன்னியில் சகல கிராமங்களிலும் இராணுவத்தினர் கிராம அமைப்புப் பிரதிநிதிகளை அழைத்து மக்களை அழைத்துவர வேண்டுமென மிரட்டும் பாணியில் கட்டளை பிறப்பித்துள்ளனர்.

இடத்துக்கு இடம் வெவ்வேறு காரணங்களை இராணுவம் மக்களை திரட்டுவதற்கு கூறிவருகின்றது.

இதன் பிரகாரம் கிளிநொச்சியில் மக்களுக்கு எரிபொருள், சூரியமின்கலம் என்பன வழங்கப் போவதாகவும் அவற்றைப் பெற்றுக்கொள்ள வருமாறும் இப்படியான பல்வேறு பொய்பரப்புரைகளை கட்டவிழ்த்துவிட்டு நாளை ஐ.நாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை செய்ய அரசு முனைகின்றது.

அத்துடன் கிளிநொச்சியின் பல கிராமங்களில் அமெரிக்க அரசாங்கத்தை கேவலமாக மக்களிடம் இராணுவம் கூறியதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை முல்லைத்தீவில் கடற்கரையோர மக்களிடம் இந்திய மீனவர்களுக்கு எதிராக நாளை ஆர்ப்பாட்டம் செய்யவேண்டும் எனக்கூறி மக்களை இராணுவத்தினர் வற்புறுத்தி வருகின்றனர்.

இந்திய மீனவர்கள் முல்லைத்தீவுக் கடலில் றோலர்களை பயன்படுத்தி அத்துமீறி மீன்பிடித்து வருவதாகவும், அதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்யவேண்டுமென மக்கள் நலன்விரும்பிகள்போல்
நாடகமாடி மக்களை ஏமாற்றி அழைத்து நாளை ஐநாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுத்த அரசாங்கம் இராணுவத்தின் மூலம் முயன்று வருவதாக முல்லைத்தீவு மக்கள் முறைப்பாடு தெரிவித்துள்ளனர்.

இதே வேளையில் ஏராளமான மக்கள் சிறிலங்கா இராணுவத்தின் இத்தகைய கபடத்தனத்தை புரிந்துகொண்டுள்ளனர்.

எங்களையே கொன்றுவிட்டு எங்களை வைத்தே ஆர்ப்பாட்டம் செய்யப் போகிறானா என்று மக்கள் கொதிக்கின்றனர்.

இதேவேளை இராணுவத்தின் இந்த விடயத்தை புரிந்துகொண்டு விழிப்புணர்வுடன் இருக்குமாறு வேண்டப்படுகின்றனர்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.