
சுமார் 40 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க்கும் இந் நிகழ்வுகளில் இலங்கை அரசையும் பங்குகொள்ளுமாறு தென்னாபிரிக்க அரசு அழைப்பு விடுத்தது. இதற்காக ஜி.எல் பீரிஸ் அவர்கள் இதில் கலந்துகொள்ள இருந்தார். இருப்பினும் இறுதி நேரத்தில் உலகத் தமிழர் பேரவையைச் சேர்ந்த சுரேன் சுரேந்திரன் மற்றும் GTF தலைவர் வணக்கத்துக்குரிய இமானுவேல் ஐயா அவர்களும் இதில் கலந்துகொள்ள இருப்பதாக இலங்கை அரசு அறிந்தது. இதனை அடுத்து இந் நிகழ்வுகளுக்கு செல்லவேண்டாம் எனவும் இந் நிகழ்வுகளைப் பகிஷ்கரிக்குமாறும் இலங்கை அரசு தனது பிரதிநிதிகளுக்கு கட்டளை பிறப்பித்துள்ளது என தென்னாபிரிக்க சென்ற GTF இன் முக்கிய உறுப்பினர்கள் சில அதிர்வு இணையத்துக்குத் தெரிவித்தனர்.
40 நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்ளும் இந் நிகழ்வுகளில் இங்கிலாந்து மகாராணியின் சிறப்புத் தூதுவரும் கலந்துகொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்க விடையமாகும். இந் நிகழ்வுகளில் உலகத் தமிழர் பேரவையானது கலந்துகொள்வதன் மூலம் பல தலைவர்களைச் சந்திக்கும் வாய்ப்பை அது பெற்றுள்ளது. தமிழர்கள் பிரச்சனை தொடர்பாக அது பல தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த இது ஒரு நல்ல சந்தர்ப்பமாக அமையும் என நம்பப்படுகிறது.
நன்றி அதிர்வு
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.