Tuesday, January 10, 2012

ஐ.தே.கவின் நிறைவேற்று சபையைக் கூட்டுமாறு பிக்குகள் முன்னணி வேண்டுகோள்!

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியில் ஏற்பட்ட இழுபறி நிலையைத் தொடர்ந்து தற்போது அக் கட்சியின் தேசிய நிறைவேற்று சபையை உடனடியாகக் கூட்டுமாறு அதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஐக்கிய பிக்குகள் முன்னணி வேண்டுகோள் விடுத்துள்ளது.

அண்மையில் நியமிக்கப்பட்ட கட்சியின் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவிற்கு தேசிய நிறைவேற்று சபையின் அங்கீகாரத்தை பெற்று கொள்ளுமாறு ஐக்கிய பிக்குகள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் உலபன சுமங்கல தேரரின் கையொப்பத்துடன் ரணில் விக்ரமசிங்கவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரணில் விக்ரமசிங்கவின் ஒருதலைப்பட்சமானதும் மக்களின் அதரவற்றதுமான செயற்குழுவும் கபடமான ஆலோசனை குழுவும் இணைந்து மேற்கொண்டுள்ள தீர்மானங்களை வன்மையாக கண்டிப்பதாக ஐக்கிய பிக்குகள் முன்னணி தெரிவித்துள்ளது.

2012 ஆம் புதுவருடத்தில் தயாசிறி ஜயசேகர எனும் திறமையான பிரபல துடிப்பு மிக்க இளம் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளிலிருந்து அகற்றப்பட்டதன் மூலம் ரணில் விக்ரமசிங்கவிற்கு நாட்டிற்கு எவ்வாறு நகைச்சுவை வழங்குகின்றார் என்பது புலப்படுவதாக அந்த முன்னணி சுட்டிக்காட்டியுள்ளது.

நாடளாவிய ரீதியில் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக மக்கள் அணிதிரண்டுள்ளதை அனைவரும் அறிவார்கள் எனவும் ஐக்கிய பிக்குகள் முன்னணியின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய கட்சி தலைவரின் பிடிவாத குணமே இந்த நிலைமை ஏற்படுவதற்கான காரணம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மகாநாயக்க தேரர்களின் கருத்துக்களை ரணில் விக்கிரமசிங்க நிராகரித்ததை விடவும் அவரது கருத்துக்களை மக்கள் நிராகரிப்பதாக ஐக்கிய பிக்குகள் முன்னணி கூறியுள்ளது.

மகாநாயக்க தேரர்களின் கருத்துக்களை ரணில் விக்ரமசிங்க நிராகரித்ததை விடவும் அவரது கருத்துக்களை மக்கள் நிராகரிப்பதாக ஐக்கிய பிக்குகள் முன்னணி கூறியுள்ளது.

ஜனநாயகம் தொடர்பில் வீண்பேச்சு பேசாது செயற்பாட்டு ரீதியாக அதனை நிரூபிக்குமாறும் கட்சியின் தேசிய நிறைவேற்று சபையை உடனடியாக கூட்டுமாறு அந்த முன்னணி ரணில் விக்ரமசிங்கவிற்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் வலியுத்தப்பட்டுள்ளது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.