Tuesday, January 17, 2012

விடுதலையான முன்னாள் போராளிகளை மீண்டும் அடைக்க புதிய திட்டம் தயார்!

புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகளுக்குப் பயங்கரவாதத்தைப் போதித்து மீண்டும் நாட்டில் அசாதாரண சூழ்நிலையைத் தோற்றுவிப்பதற்கு ஜே.வி.பி.யின் கிளர்ச்சிக்குழு முயற்சிக்கின்றது. இதற்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக சிங்கள இணையதளமொன்றுக்கு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ கூறியுள்ளவை வருமாறு:
கிளிநொச்சியை வதிவிடமாகக் கொண்ட முன்னாள் போராளிகளின் வீடுகளுக்குள் பலவந்தமாகச் சென்று அவர்களுக்கு உபதேசம் வழங்க ஜே.வி.பியின் மாற்றுக்குழு முயற்சித்துள்ளது. புலனாய்வுப் பிரிவினரின் மத்தியஸ்தத்துடன் இந்த முயற்சி தோற்கடிக்கப்பட்டது.யுத்தம் காரணமாக எமது நாட்டு மக்கள் 30 வருடங்களாகப் பல்வேறு துன்பங்களை அனுபவித்துள்ளனர்.


எனவே, மீண்டும் அவ்வாறானதொரு நிலை ஏற்படுவதற்கு கடுகளவேனும் நாம் இடமளிக்கப்போவதில்லை. அதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதற்கு நாம் தயாராகவே உள்ளோம்.இவ்வாறானதொரு குழு புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டு நாட்டில் அசாதாரண நிலைமையைத் தோற்றுவிக்க முயற்சிப்பது தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் தீவிரமாகக் கவனம்செலுத்தி வருகின்றனர் என்றார் அவர்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.