Saturday, January 28, 2012

பாகிஸ்தான் இராணுவத் தளபதியை குறிவைத்து ரொக்கட் தாக்குதல்.

பாகிஸ்தானின் அபோதாபாத் பகுதியில் அல் கய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட கட்டிடம் அருகில் உள்ள , இராணுவ அகடமி மீது நேற்று ரொக்கட் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. பாகிஸ்தான் இராணுவத்தளபதி கியானியை குறிவைத்தே இந்தத் தாக்குதல நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அபோதாபாத்தில் தான் அல்- குவைதா தலைவர் ஒசாமா பின்லாடன் வீடும் உள்ளது.பாகிஸ்தான் அரசுக்கு தகவல் தெரிவிக்காமல், அமெரிக்க கடற்படையினர் கடந்த ஆண்டு மே மாதம் அங்கு திடீர் தாக்குதல் நடத்தி பின்லேடனை சுட்டுக் கொன்றனர். அதன்பிறகு அந்த கட்டிடத்துக்கு சீல் வைக்கப்பட்டது.

இதன் பின்புறத்தில் சிறிது தொலைவில் பாகிஸ்தான் இராணுவ அகடமி இருக்கிறது.இந்த அகடமியைக் குறிவைத்து நேற்று அதிகாலையில், ஒன்பது ரொக்கெட்டுகள் வீசப்பட்டன. இவற்றில் இரண்டு கையெறி ரொக்கெட்டுகளும், மூன்று ரொக்கெட்டுகளும் அகடமியின் சுற்றுச் சுவர் மீது மோதி சேதத்தை ஏற்படுத்தின. மூன்று ராக்கெட்டுகள் சுவருக்கு வெளிப்புறம் விழுந்தன.

இராணுவ அகடமியில் நடந்த ஒரு கூட்டத்தில் பாகிஸ்தான் இராணுவத் தளபதி கியானி கலந்து கொண்ட ஒரு மணி நேரத்தில் இந்தத் தாக்குதல் நடந்திருக்கிறது.

அபோதாபாத் அருகில் உள்ள நவான் ஷெர் என்ற சிறிய நகரத்தில் உள்ள இலியாசி மசூதியின் பின்புறத்தில் அமைந்திருக்கும் சிறிய குன்றில் ஒன்பது ரொக்கெட் ஏவுதளங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இத்தாக்குதலில் எவ்வித உயிர்ச் சேதமும் ஏற்படவில்லை. ஆனால், அகடமி சுற்றுச் சுவர் மட்டும் சேதம் அடைந்துள்ளது.ஒசாமா கொல்லப்பட்ட பிறகு அங்கு தீவிரவாதிகள் நடத்திய முதல் தாக்குதல் இது என்று போலீஸ் உயரதிகாரி அப்துல் கரீம் தெரிவித்தார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.