Saturday, January 28, 2012

ஒசாமாவை அடையாளம் காண பாகிஸ்தானில் சிஐஏ போட்ட தடுப்பூசி - இரகசியங்களை வெளியிடுகிறது அமெரிக்கா

அபோதாபாத் உள்ள வீடுகளில் மருத்துவர்களை வைத்து தடுப்பூசிகளைப் போட வைத்த அமெரிக்க உளவு அமைப்பு, இரத்த மாதிரிகளை மரபணுச்சோதனை நடத்தி அங்கிருப்பது ஒசாமா பின் லேடன் தான் என்பதை உறுதி செய்த பின்னரே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலாளர் லியோன் பெனட்டா சிபிஎஸ் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் இந்த இரகசியத்தை வெளியிட்டுள்ளார்.
பாகிஸ்தான் அரசு கைது செய்துள்ள மருத்துவர் ஷகீல் அப்ரிதி தான் ஒசாமா பின்லேடன் குறித்த இரத்த மாதிரிகளை சேகரிப்பதற்கு அமெரிக்காவுக்கு உதவியதாகவும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
அபோதாபாத் வீட்டில் தங்கியிருப்பது ஒசாமா தான் என்பதை உறுதி செய்ய அந்தப் பகுதியில் உள்ள வீடுகளில் டாக்டர் ஷகீல் அப்ரிதி தலைமையிலான மருத்துவர்களை வைத்து அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ தடுப்பூசிகள் போட வைத்தது.

அவர்கள் தடுப்பூசி போடுவது போலச் சென்று வீடுகளில் இருந்தவர்களின் இரத்த மாதிரிகளை எடுத்து வந்தனர். அந்த இரத்த மாதிரிகளில் சிஐஏ மரபணுச் சோதனை நடத்தியது.
அப்போது ஒரு இரத்த மாதிரி ஓசாமாவுடையது என்பது உறுதியானது. இதை வைத்தே அந்த வீட்டில் ஒசாமா பதுங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த மருத்துவர் மீது பாகிஸ்தான் குற்றம்சாட்டி கைது செய்திருப்பதற்கு மிகவும் வருந்துகிறேன் என்றும் பெனட்டா அதில் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் அபோதாபாத் வளாகத்தில் ஒசாமா தங்கியிருந்தது பற்றி பாகிஸ்தானுக்கு முன்பே தெரியுமா என்பதற்கு போதுமான ஆதாரம் இல்லை என்றும் பெனட்டா தெரிவித்துள்ளார்.

இதனிடையே அப்ரிதியை விடுவித்து அமெரிக்காவிடம் ஒப்படைப்பதன் மூலம் அப்ரிதி விவகாரத்தில் சுமூகத் தீவு காண முடியும் என்று பாகிஸ்தான் நம்புவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.