Tuesday, January 10, 2012

இலங்கையில் ஆயுதப் போர்! புலம்பெயர் மக்களின் கனவிலேயே நடக்கும்!!

இலங்கையில் விடுதலைப்புலிகள் ஆயுதப் போராட்டத்திற்குத் தயாராகி வருகின்றனர் என புலனாய்வுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதாக அண்மையில் ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.

இருந்தும் அதனை தேசிய புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரண மறுத்ததுடன், இலங்கையில் இனிவரும் காலங்களில் யுத்தம் என்றால் அது புலம்பெயர் மக்களின் கனவிலேயே நடக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

புலனாய்வுத்துறைப் பணிப்பாளரின் கருத்தினை ஆழமாக நோக்குவோமேயானால், தற்போது புலம்பெயர் நாடுகளில் நடைபெறும், அங்கு இருக்கும் புலிகளின் ஆதரவாளர்களின் செயற்பாடுகள் என்பன அவரின் கருத்தை நிஜமாக்கியுள்ளது எனலாம்.

அந்தளவுக்கு அங்குள்ளவர்களின் சுயநலப்போக்கு, மாவீரர்களை வைத்துப் பிழைப்பு நடத்தும் கேவலமான செயற்பாடு என்பன ஹெந்தவிதாரணவின் கூற்றுக்கு வலுச்சேர்த்துள்ளது.

இது இவ்வாறிருக்க விடுதலைப்புலிகளுக்கு நிதி சேகரித்தவர்கள், தற்போதும் நிதி சேகரித்துக் கொண்டிருப்பவர்கள் அனைவரும் இவ்வாறு சேகரிக்கப்படு்ம் நிதி மூலம் உல்லாச வாழ்க்கையை அனுபவித்து வருகின்றனர்.

எனவே இது அனைத்தும் ஹெந்தவிதாரணவின் கூற்றின்படி இனியொரு யுத்தம் இலங்கையில் நடப்பதைப் புலம்பெயர் மக்கள் கனவிலேயே காண முடியும் என்பதைச் சுட்டிக்காட்டி நிற்கின்றது.

ஆகவே காலத்தின் தேவை அறிந்து, தமிழ் மக்களின் தற்போதைய சூழ்நிலையினைப் புரிந்து கொண்டு புலம்பெயர் நாடுகளில் இருந்து குரல்கொடுக்க வல்லவர்கள் இத்தனைகளையும் அடியோடு நிறுத்தி உண்மையான, உறுதியான செயற்பாடுகளில் இறங்குவார்களாயின், எதிர்கால தமிழினத்தின் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.