Tuesday, January 03, 2012

ஆணைக்குழுவின் அறிக்கையானது புரட்டிப் படிப்பதற்கு அது ஒன்றும் பைபிள் இல்லை! ரம்புக்வெல

நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்களின் இணக்கப்பாட்டுடன், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான திட்டம் ஒன்றை சிறிலங்கா அதிபர் விரைவில் நடைமுறைப்படுத்தவுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள கெஹலிய ரம்புக்வெல..
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச விரைவில், அனைத்து அரசியல் கட்சிகளுடனும் இதுதொடர்பாக ஆலோசனை நடத்தவுள்ளார். அத்துடன் பொதுமக்களின் கருத்துகளையும் அவர் அறியவுள்ளார் என தெரிவித்துள்ளார்.

பரந்துபட்ட விவாதம் ஒன்றின் மூலம் வெளிப்படைத் தன்மையுடன் இந்தப் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதன் மூலம், சிறுபான்மையினர் உள்ளிட்ட அனைத்து மக்களினதும் விருப்பங்களை நிறைவேற்ற முடியும் என சிறிலங்கா அரசாங்கம் நம்புகிறது. நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை அவசரப்ப்டடு நடைமுறைபடுத்த முடியாது.

இந்த அறிக்கையின் உள்ளடக்கங்கள் மற்றும் வெளிப்படைத்தன்மை என்பன சிறிலங்கா அதிபரின் நேர்மையையும் அர்ப்பணிப்பையும் நிரூபித்துள்ளதுடன் அறிக்கை உருமறைக்கப்பட்டதான குற்றச்சாட்டுகளும் பொய் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் பரிந்துரைகள் சிலவற்றை நடைமுறைப்படுத்துவது அரசியலமைப்புக்கு அமைவானதாக இருக்க வேண்டும் என குறிப்பிட்ட அவர் - அறிக்கையானது புரட்டிப் புரட்டிப் படிப்பதற்கு அது ஒன்றும் பைபிள் இல்லை எனவும் நாங்கள் நிலையான மற்றும் நீடித்த தீர்வைத் தேடும் எமது முயற்சியில் கவனமாக நடந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.