Wednesday, January 11, 2012

ஆபிரிக்க நாடுகளின் அபிமானத்திற்குரிய தலைவர் மஹிந்தவாம்!

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் சிறிலங்கா அரசுக்கு எதிராக ஆபிரிக்க நாடுகளைத் திருப்பிவிடும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முயற்சி ஒரு போதும் பலிக்காது என்று தென்னாபிரிக்காவுக்கான சிறிலங்கா தூதுவர் செஹான் ரத்னவேல் தெரிவித்துள்ளார்.

ஆபிரிக்கத் தேசிய காங்கிரசின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க தென்னாபிரிக்கா சென்றுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள், அங்கு பல்வேறு ஆபிரிக்க நாடுகளின் பிரதிநிதிகளுடன் பேச்சுக்களை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

"30 ஆண்டுகாலப் போரை முடித்து வைத்த சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் சாதனையை ஆபிரிக்க நாடுகளின் அரசுகளும், அரச தலைவர்களும் பாராட்டுகிறார்கள். ஆபிரிக்க நாடுகளில் அவர் அபிமானத்துக்குரிய தலைவராக விளங்குகிறார்.

அவருக்கும் சிறிலங்கா அரசாங்கத்துக்கும் எதிராக தமிழ் தேசிய கூட்டமைப்பு எவ்வளவு தான் போலிப் பிரசாரங்களை மேற்கொண்டாலும் எடுபடாது.

அத்தகைய பிரசாரங்கள் ஜெனீவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைகள் கூட்டத்தொடரிலோ வேறு எந்த அரங்கிலோ வெற்றியளிக்கப் போவதில்லை.

ஆபிரிக்க நாடுகள் போருக்குப் பின்னர் சிறிலங்காவில் அமைதி, பொருளாதார வளர்ச்சி என்பன நிலைத்திருப்பது குறித்து மகிழ்ச்சியடைந்துள்ளன.

அதனால், ஜெனிவாவில் ஆபிரிக்க நாடுகள் சிறிலங்காவுக்கு எதிராக போர்க்கொடி தூக்குவதற்குச் சாத்தியமில்லை" என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

1 comment:

  1. தமிழனின் அழிவுக்கு வீழ்ச்சிக்குக் முதல் காரணம் கொலைவெறி அரசுக்கு கால் நக்கும் இப்படிப்பட்ட தமிழ்ப் பெயர் கொண்ட அசிங்கங்களே. தம் கண் எதிரே தன் இனத்தை அழித்த கொலைவெறியனின் செயலை ஆமோதிக்கும் இவர்களால் தமிழன் இன்றும் தலைகுனிந்து அவமானத்துடனே வாழ்கின்றான்.

    ReplyDelete

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.