Monday, December 05, 2011

புலம்பெயர் நாடுகளில் சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சின் உளவு சேவையில் ஈடுபடும் முன்னாள் போராளிகள் - சிறீலங்கா கார்டியன்-( Sri Lanka Guardian )

நிலத்தில் எமது விடுதலைப் போராட்டம் சர்வதேச நாடுகளின் ஆதரவுடன் இலங்கை இனவெறி அரசால் 2009 ஆண்டில் கொடூரமாக தமிழர்கள் மீதான இனப்படுகொலையுடன் முடக்கப்பட்ட பின்னர் ,

புலம்பெயர் நாடுகளில் தமிழீழ மக்கள் என்றும் இல்லாதவாறு மிக எழுச்சியுடன் தமிழீழ விடுதலைப்புலிகளின் புலம்பெயர் கட்டமைப்போடு தமது தேசியக் கடமையை உறுதியோடு முன்னெடுத்துவருகின்றனர்.

கடந்த இரண்டு வருடங்களாக தமிழீழ போராட்டத்தை புலம்பெயர் நாடுகளில் முடக்குவதற்கு இலங்கை அரசு பல்வேறு கோணங்களில் தனது முயற்சியை எடுத்து வருகின்றது அனைவராலும் அறியப்படுகின்றது.

இலங்கை அரசின் பாதுகாப்பு அமைச்சர் கோட்டாபய இராஜபக்ஷவின் நேரடி கண்காணிப்பில் கூர்மையான புலனாய்வு பயிற்சி உட்பட ஒரு கடுமையான மறுவாழ்வு திட்டத்தில் உட்படுத்தப்பட்டு சில முன்னாள் போராளிகள் இவ்வாறான உளவு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்கள் குறிப்பாக கனடா மற்றும் ஐரோப்பாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டு இவர்களது நோக்கு தமிழீழத்திற்கு ஆதரவான செயற்பாட்டாளர்கள் மட்டும் அல்ல அத்தோடு உலகத் தமிழர் பேரவை மற்றும் நெடியவனின் தலைமையின் கீழ் செயல்ப்படும் பல்வேறு தமிழீழ விடுதலைப் புலிகளின் குழுக்கள் என்று சிறீலங்கா கோர்டியன் தெரிவித்துள்ளது.

அத்துடன் கருணாவின் வலது கையாக செயற்பட்டவரும் மற்றும் கருணாவுடன் இணைந்து இலங்கையின் கிழக்கு மாகாணங்களில் பல கொலைகளிலும் கடத்தலிலும் ஈடுபட்டிருந்த இனியபாரதி கூட இலங்கை அரசாங்கத்தின் துன்புறுத்தலுக்கு பயம், இலங்கையில் இருந்து தப்பி வந்துள்ளார் என்ற போர்வையின் கீழ் அண்மையில் பிரான்சில் இறங்கியது என்பதையும் சிறீலங்கா கோர்டியன் சுட்டிக்காட்டியுள்ளது.

சிறப்பாக இவர்கள் தமிழீழத்திற்கு ஆதரவான அமைப்புகளுடன் மற்றும் இலங்கை அரசுக்கு எதிரானவர்களுடன் நண்பர்களாக பழகி உள்ப்புகுர்ந்து இலங்கை பாதுகாப்பு அமைச்சுக்கு தேவையான வேலையில் ஈடுபடுகின்றனர் என்பதும் அச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எப்படி உலகமெல்லாம் வாழும் பலஸ்தீனிய விடுதலைச் செயற்பாட்டாளர்களை குறிவைத்து இஸ்ரயல் நாட்டின் உளவு அமைப்பான "மொசாட்" தனது உத்தியை கையாண்டதோ அதே போல் புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழ்த் தேசிய அமைப்புகளின் கட்டமைப்புகளை உடைப்பதற்கு மட்டும் அல்ல தேசிய செயற்பாட்டாளர்களை குறிவைத்து இலங்கை பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய இராஜபக்ஷவின் நேரடி கண்காணிப்பில் அதே உத்தி பின்பற்றப்படுவதாக கோடியனில் இந்த இரகசியத்தை வெளியிடப்பட்டுள்ளது .

ஆதாரம் சிறீலங்கா கார்டியனில் பிரசுரிக்கப்பட்ட செய்தியின் குறிப்பு :
http://www.srilankaguardian.org/2011/12/ex-ltte-cadres-despatched-overseas-to.html

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.