Thursday, December 15, 2011

அரசியல் தீர்வு பற்றிய எந்தச் சமிக்ஞையும் இலங்கையில் இல்லை – பிரிட்டன் ஊடகம்!

இலங்கையில் போர் முடிவடைந்து விட்டது. விடுதலைப்புலிகள் தோல்வியடைந்து விட்டனர். ஆனாலும் அரசியற் தீர்வு பற்றிய எந்தச் சமிக்ஞையையும் இலங்கையில் காண முடியவில்லை – என்று பிரிட்டன் நாளேடான “இன்டிபென்டன்ட்” செய்தி வெளியிட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் 1995 தொடக்கம் போரின் இறுதிக் கட்டம் வரை – போர் சாராத வேறு பணிகளில் ஈடுபட்ட மூத்த அதிகாரி ஒருவரே இவ்வாறு கூறினார் என்று அதில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.தனது பெயரையோ, செவ்வி வழங்கிய இடத்தையோ குறிப்பிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்ட அவர், விடுதலைப் புலிகள் அமைப்பில் வகித்த பங்கு காரணமாக அடுத்த ஆண்டில் நீதி மன்றத்தில் குற்றச் சாட்டை எதிர் கொள்ள உள்ளார்.

அரசியல் தீர்வு காண்பதே முக்கியமானது. போர் முடிவடைந்து விட்டது. விடுதலைப் புலிகள் அமைப்பு தோற்கடிக்கப்பட்டு விட்டது. ஆனாலும் அரசியற் தீர்வு பற்றிய எந்தச் சமிக்ஞைகளையும் இலங்கையில் காணமுடியவில்லை.

அவர்கள் இணக்கப்பேச்சு நடாத்துவதாக கூறினார்கள். ஆனால் மக்கள் திருப்தி கொள்ளவில்லை.

எமக்கு ஒரு அரசியல் தீர்வு தேவை. சிங்கள மக்களின் ஆதரவு இன்றி தமிழ் மக்களால் ஒர் அரசியல் தீர்வைப் பெற முடியாது. என்றும் அவர் கூறியுள்ளார். என்றும் அவர் கூறியுள்ளார். என்று குறித்த நாளேடு தெரிவித்துள்ளது

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.