Thursday, December 29, 2011

யாழ். மாணவர்கள் இருவர் முதலாம் இரண்டாமிடங்களை தேசிய ரீதியில் பெற்று சாதனை !

2011 ஆம் ஆண்டுக்கான கல்விப்பொதுத்தராதர பத்திர உயர்தரப் பரீட்சையில் கணிதத்துறையிலும், விஞ்ஞானத் துறையிலும் யாழ். மாணவர்கள் இருவர் முதலாம் இரண்டாமிடங்களை தேசிய ரீதியில் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

தேசிய ரீதியில் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெற்றுள்ளவர்களின் விபரங்களை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி, உயிரியல் விஞ்ஞானம், கொழும்பு றோயல் கல்லூரியைச் சேர்ந்த பிரமித் ஷசிந்த ருவனோத்திரன முதலாமிடத்தையும், யாழ். சென். ஜோன்ஸ் கல்லூரியைச் சேர்ந்த ஆனந்தராஜா சஞ்ஜயன் இரண்டாம் இடத்தையும் முஸ்லிம் மகளிர் கல்லூரியைச் சேர்ந்த முஹமட் சலீம் பாத்திமா ஷாலிதா மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.

கணிதப் பிரிவில், யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை, உடுப்பிட்டி அமெரிக்க மிஷன் கல்லூரியைச்சேர்ந்த கமலக்கண்ணன் கமலவாசன் முதலாமிடத்தையும், கொழும்பு றோயல் கல்லூரியைச் சேர்ந்த நுஷென் மனித்யா செனவிரட்ன இரண்டாமிடத்தையும், கண்டி தர்மராஜா வித்தியாலத்தைச் சேர்ந்த அமில ருவன் சிறி சில்வா மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.

வர்த்தகப்பிரிவில், டெபராவௌ மகா வித்தியாலயம் திஸ்ஸமஹாராமவைச் சேர்ந்த கமகே இஷாரா டில்கானி முதலாமிடத்தையும், காலி ரிக்மன் வித்தியாலயத்தைச் சேர்ந்து ரவிந்து சுபுன் லியனகே இரண்டாமிடத்தையும் கொழும்பு விசாகா மகளிர் வித்தியாலயத்தைச் சேர்ந்த ஒசந்த லக்ஷன மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளனர்.

கலைப்பிரிவில், கேகாலை சென். ஜோர்ஜ் மகளிர் வித்தியாலயத்தைச் சேர்ந்த சஷிந்தனி கௌசல்யா சேனநாயக்க முதலாமிடத்தையும் காலி சௌத் லண்ட்ஸ் வித்தியாலயத்தைச் சேர்ந்த சமிந்திர உமேஷா இரண்டாம் இடத்தையும், நீர்கொழும்பு நியூ ஸ்டெட் மகளிர் வித்தியாலயத்தைச் சேர்ந்த சந்திமாலி பெரேரா, மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர். _

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.