Tuesday, December 06, 2011

போலியான பிறப்பு சான்றிதழ், கல்விச்சான்றிதழ்களை சமர்ப்பித்து பிரித்தானிய வீஸாவுக்கு முயற்சித்தவர் கைது!

பிரித்தானிய விஸாவுக்காக போலி ஆவணங்களை சமர்பித்த இலங்கை விண்ணப்பதாரியொருவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பிலுள்ள பிரித்தானிய தூதுவராலயம் இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

பிரித்தானியாவில் கடமையாற்றும் தாயுடன் இணைவதற்காக, தனது இளைய சகேதரனுடன் குறித்த விண்ணப்பதாரி பிரித்தானிய விஸாவுக்காக விண்ணபித்துள்ளார். 18 வயதிற்கு மேற்பட்ட குறித்த விண்ணப்பதாரி போலியான பிறப்பு சான்றிதழ் மூலம் வயது குறைந்தவர் என காட்ட முனைந்துள்ளார். போலியான கல்வி சான்றிதழ்களையும் சமர்ப்பித்துள்ள இவர் உயிருடனுள்ள தந்தை இறந்துள்ளதாக போலி மரண சான்றிதழையும் சமர்ப்பித்துள்ளார்.

குறித்த இருவரினதும் விஸா விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்டவர் 10 வருடங்களுக்கு பிரித்தானியா செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பிரித்தானிய எல்லை முகவர் நிலைய முகாமையாளர் கருத்து தெரிவிக்கையில்,

"பிரித்தானிய குடிவரவு விதிகளை மீறுவதை எம்மால் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. எங்கேயாவது, குற்றங்கள் மீறப்பட்டால் உரிய நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம். விஸாவுக்காக போலி ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டாம் என மிக கடுமையாக அறிவுறுத்துகிறேன்" என தெரிவித்தார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.