Tuesday, December 06, 2011

யாழ்ப்பாண குடாநாட்டு குடிநீர் திட்டத்துக்கு 21,000 மில்லியன்!

இரணைமடுக் குளத்திலிருந்து யாழ் குடாநாட்டின் மூலை முடுக்கு எங்கிலும் குழாய் மூலம் சுத்தமான குடிநீரை பெற்றுக்கொடுக்கும் வகையிலேயே இச்செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட விருப்பதாகவும் அமைச்சர் தினேஷ் கூறினார்.

நாட்டின் ஏனைய இடங்களுடன் ஒப்பிடுகையில் வடக்கிற்கான நீர்வடிகாலமைப்பு முறைமை சீரானது ஆகையால் அப்பகுதிக்கான நீர்விநியோகத் தினை இலகுவாக முன்னெடுக்க முடியும். எனவே, சுமார் மூன்று அல்லது நான்கு வருடங்களுக்குள் இத்திட்டத்தை பூரணமாக்குவதன் மூலம் குடாநாட்டு மக்களுக்கு குழாய் மூலமான சுத்தமான குடிநீரைப் பெற்றுக்கொடுக்க முடியுமென நம்புகிறோம் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இதன் முதற்கட்ட செலவீனங்களுக்காக 2012 ஆம் ஆண்டுக்குரிய வரவு செலவுத் திட்டத்தில் 21 ஆயிரம் மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.