இலங்கை சுதந்திரம் அடைந்த காலம் முதல் திருகோணமலை பிரட்ரிக் கோட்டை திருகோனேஸ்வரா ஆலய வளாகத்தினுள் அமைந்திருந்த அரசாங்க அதிபர் அலுவலகம் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னர் இரானுவத்திலிருந்து ஓய்வு பெற்ற அதிகாரி நியமிக்கப்பட்டதன் மூலம் தமிழ் பேசும் மக்களின் தலைமை நகரான திருகோணமலை சிங்கள மயமாகி வருவதால் தமிழ் பேசும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
திருமலை நகரத்திலிருந்து நான்கு கிலோமீற்றருக்கு அப்பால் உள்ள கண்டி வீதி, 04ம் கட்டைப் பகுதியில் பெரும்பான்மையின சிங்கள மக்களின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள பகுதியில் அரசாங்க அதிபர் அலுவலகம் பல கோடி ரூபாய் செலவில் அதீநவீன முறையில் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இங்கு கடமையாற்றும் அநேகமான அரச ஊழியர்கள் தமிழ் பேசும் மக்களாகும்.அலுவலகத்தில் கடமையாற்றுபவர்கள் இராணுவ கட்டளைத் தளபதியான அரசாங்க அதிபருக்கு அஞ்சியே கடமையாற்றி வருகின்றனர்.
அத்துடன் அரசாங்க அதிபரை பொதுமக்கள் சந்திப்பதானால் இராணுவ சிப்பாய் ஒருவரின் பூரண சோதனையின் பின்னரும் மற்றும் புலனாய்வு விசாரணையின் பின்னருமே அனுமதிக்கப்படுவர்.
தற்போது சிங்கள பேரினவாத கட்டுப்பாட்டுக்குள் இயங்கும் அரசாங்க அதிபர் அலுவலகம் தமிழ் பேசும் மக்களின் சேவைகள் நிராகரிக்கப்பட்டு சிங்கள இனத்தவர்களுக்கே கூடுதலான சேவைகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ் பேசும் மக்களின் கட்டுப்பாட்டுக்குள் இயங்கி வரும் திருகோணமலை நகரம் காலப்போக்கில் 04ம் கட்டைப்பகுதிக்கு புதிய நகரம் என பெயர் வைக்கப்பட்டு மாற்றமடையலாம் எனவும் புத்திஜீவிகள் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் திருகோணமலை நகரத்தை மாநகர சபையாக மாற்றுகின்ற சதித்திட்டம் தீட்டப்பட்டு வருகின்றது.அவ்வாறு நடக்குமாக இருந்தால் தமிழ் மக்களுக்கு இருக்கும் அதிகாரம் சிங்கள இனத்தவர்களுக்கே மாறுமெனவும் புத்திஜீவிகள் தெரிவிக்கின்றனர்.

0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.