தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான மற்றுமொரு பேச்சுவார்த்தை இன்று மாலை கொழும்பில் இடம்பெறவுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய பிரதிநிதிகள் அமெரிக்கா, கனடா மற்றும் லண்டன் உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்றிருந்ததால் தடைபட்டிருந்த பேச்சுவார்த்தை இன்று மீண்டும் ஆரம்பமாகிறது.
இதன்படி இன்றைய பேச்சுவார்த்தையில் இதற்கு முன்னர் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் போது கூட்டமைப்பு அரசிடம் முன்வைத்த கோரிக்கைகளுக்கான அரசின் பதில் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு சார்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன் மற்றும் சுமந்திரன் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர். அரச தரப்பு சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் ரஜிவ விஜேசிங்க, சசின் வாஸ் குணவர்த்தன, அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா உள்ளிட்டோர் பங்கேற்பர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.