இன்றைய நாள் நல்ல நாள் இதற்கு முன்னர் வந்த நவம்பர் 27ம் திகதி ஞாபகமா? அன்று இந்த தினம் வந்தால் ஒரு வாரத்திற்கு பெற்றோர் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப அச்சப்படுவர். காரணம் என்ன நடக்கும் என்று தெரியாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் தெரிவித்துள்ளார்.
தெற்கு நெடுஞ்சாலையை திறந்து வைத்து கரந்தெனியவில் இடம்பெற்ற பிரதான நிகழ்வில் இன்று உரையாற்றிய ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.
அப்போதிருந்த அரசாங்கங்கள் அதனை அனுமதித்து சர்வதேசத்திற்கு காட்டினர். ஆனால் நாம் அதற்கு இம்முறை இடம்கொடுக்கவில்லை.
நான் பிரதமராக இருந்தபோது மன்னார் – மடுவில் வீதி ஒன்றை அபிவிருத்தி செய்தேன். அதனை திறந்து வைக்க மடு செல்ல வேண்டுமானால் புலிகளிடம் அனுமதி பெற வேண்டும் என கூறினர்.
பாதையை அமைத்து பிரதமர் ஒருவருக்கு அதனை திறக்க புலிகளிடம் அனுமதி கோர வேண்டி ஏற்பட்டது. ஆனால் நான் அனுமதி கோரவில்லை. அங்கு போகவும் இல்லை. அப்படியான நாட்டில்தான் இன்று அனுமதி இன்றி செல்லக்கூடிய நிலையை ஏற்படுத்தியுள்ளோம்.
வெளிநாடுகளில் வேலைக்குச் செல்லும் எமது இளைஞர்கள் அங்கு வீதிகளைப் பற்றி பெருமிதமாகப் பேசுவர். இங்குள்ள வீதிகள் என்னவென முணுமுணுப்பர். ஆனால் அவ்வாறு சொல்வதற்கு இன்று இடமளிக்காமல் இந்த அதிவேக நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது.
தெற்கிலிருந்து கொழும்புக்கு ஒரு மணித்தியாலத்தில் வர இன்று வாய்ப்பு உள்ளது. வீதிகள் மூட, மூட பிரிவினைவாதத்திற்கான வாய்ப்பு அதிகரிக்கும் பாதைகள் அமைக்க, அமைக்க நாடு ஒன்றுபடுவதாக கருதப்படும்.
இலங்கையர்களின் ஆயுட்காலம் அன்று குறைவு. இன்று அதிகரித்துள்ளது. 78 வயதாக உள்ளது.
இலங்கை முன்னேற்றமடையாத நாடு என சிலர் வெளிநாடுகளில் சென்று பரப்புரை செய்து வருகின்றனர். ஆனால் நாம் அதனை மாற்றி இலங்கை முன்னேற்றம் காணும் நாடு என காண்பித்துள்ளோம் என்றார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்.

0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.