Sunday, October 02, 2011

மன்னார் கடற்படுகையில் எரிவாயு கண்டுபிடிப்பு-கெய்ர்ன் நிறுவனம் அறிவிப்பு!

மன்னார் கடற்படுகையில் எரிவாயு வளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதியில் பெற்றோலிய அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டுள்ள கெய்ர்ன் இந்தியா எனும் நிறுவனம் நேற்று அறிவித்துள்ளது. ஓகஸ்ட் மாத முற்பகுதியில் கிணறொன்றை தாம் அகழ்ந்ததாகவும் கடந்தவாரம் எரிவாயு கண்டுபிடிக்கப்பட்டது எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

மன்னார் கடற்படுகையில் எஸ்.எல்.2007-01-001 என குறிப்பிடப்பட்ட பகுதியில் பெற்றோலிய அகழ்வாராய்ச்சியில் ஈடுபடுவத்றகான உரிமை கெய்ர்ன் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. அந்நிறுவனத்தின் ஒரு அங்கமான கெய்ர்ன் லங்கா (பிரைவேட்) லிமிடெட் எனும் நிறுவனம் மன்னார் பகுதியில் மேற்படி ஆய்வில் ஈடுபட்டுள்ளது.

‘சிக்யு’ எனும் அகழ்வுக் கப்பலை பயன்படுத்தி அப்பகுதியில் 3 கிணறுகளை கெய்ர்ன் நிறுவனம் தோண்டவுள்ளது. இதற்கான செலவு 110 மில்லியன் டொலர்களாகும்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.