Thursday, September 22, 2011

கொக்கிளாயில் புத்தபிரானும் சிங்கள மக்களோடு மக்களாக குடியேறினார்! இருந்த பிள்ளையார் மாயமானார்! ! உபசரிக்க துறவியும் வந்தார்.

முல்லைத்தீவு கொக்கிளாய்ப் பகுதியில் பொது மற்றும் தனியார் காணிகளை உள்ளடக்கி பௌத்த விகாரை ஒன்று கட்டுவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கொக்கிளாய் மருத்துவமனைக் காணியின் ஒரு பகுதி கொக்கிளாய் உபதபாலகக் காணியின் ஒரு பகுதி மற்றும் தனியார் ஒருவரது காணி என்பவற்றை இணைத்து இந்த விகாரை அமைக்கப்படவுள்ளது.

ஏற்கனவே பிரசித்தமான அரசடிப்பிள்ளையார் ஆலயம் இந்தப் பகுதியிலிருந்து அழிக்கப்பட்டு அவ்விடத்திலேயே விகாரை அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பகுதியில் பௌத்த பிக்கு ஒருவர் தென்னிலங்கையிலிருந்து அழைத்து வரப்பட்டு தங்கவைக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. விகாரை அமைப்பதற்கான கட்டுமான பொருள்கள் குறித்த காணியில் இராணுவத்தினரால் கொண்டுவந்து பறிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.