கடந்த காலத்தைப் போன்று தவறான சூழ்நிலைக்கு செல்லவேண்டாம். ஏனெனில் எதிர்வரும் சந்ததியினருக்கு அவற்றை எதிர்கொள்ளும் சக்தி கிடையாது, என்று பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
பளை மத்திய கல்லூரியில் புதிதாக அமைக்கப்பட்ட மூன்று மாடிக் கட்டடம் இன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திறந்துவைத்தார். இங்கு உரையாற்றிய அமைச்சர் ,டக்ளஸ் அமைதி நிறைந்த அற்புதமான சூழலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் ஏற்படுத்தித் தந்துள்ளார் என தெரிவித்தார்.
இவ்வாறான அமைதியான சூழலை பாதுகாக்க வேண்டியது அனைவரது கடமை எனவும், கிடைப்பதை பாதுகாப்பதனுடாக நாம் முன்னேற முடியும் எனவும் அவர் கூறினார்.
இந்த அமைதியான நிலை தொடர்ந்தும் பாதுகாக்கப்பட வேண்டும் என அவர் மக்களை மேலும் கேட்டுக்கொண்டார். இதேவேளை இந்தப் பாடசாலையின் புதிய கட்டடத்தை அமைத்துக் கொடுக்க உதவிய அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்கும் அந்த நாட்டு மக்களுக்கும் அமைச்சர் தனது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.
இந்த நிகழ்வில் வடமாக ஆளுனர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி, ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார், வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் பி.விக்கினேஸ்வரன், இலங்கைக்கான அவுஸ்ரலிய உயர்ஸ்தானிகர் காதிக்லுக்மன்ட் மற்றும் ஐ.நா சிறுவர் நிதியத்தின் இலங்கைப் பிரதிநிதி றீசா கொசைனீ உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.