தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் இந்தியா பயணமாகியுள்ளார். இம்மாதம் 19 ஆம் திகதிமட்டிலேயே கொழும்பு திரும்புவார் என்றும் மறுநாள் யாழ்ப்பாணத்தில் நடைபெறும் தமிழரசுக்கட்சியில் போட்டியிட்டு வெற்றியீட்டிய நகரசபைகள் மற்றும் பிரதேச சபைகளின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களின் பதவி ஏற்பு நிகழ்வில் பங்குபற்றுவார் என்றும் கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சம்பந்தனின் இந்திய விஜயம் பற்றிய விபரங்களை தமிழ் தேசியக்கூட்டமைப்பு உத்தியோகபூர்வமாக வெளியிடவில்லை எனினும் இராஜதந்திர சந்திப்புக்கள் சிலவற்றில் பங்குபற்றுவதற்காகவே அவர் அங்கு செல்கிறார் என தெரியவருகிறது. சிறிலங்கா அரச தரப்பு அரசியல் தீர்வு திட்டம் தொடர்பாகவும், இதுவரை நடத்தப்பட்ட பேச்சுக்கள் தொடர்பாகவும் உத்தியோகபூர்வமாக பதில் அளிக்கும் பட்டத்திலேயே இனிமேல் பேச்சுவார்த்தைகளில் தாம் பங்குபற்ற முடியும் என தமிழ் தேசியக்கூட்டமைப்பு அறிவித்திருக்கும் நிலையில் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் தொடர்பாக இந்திய அரச மட்டம் சம்பந்தனுடன் பேச உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.