Monday, August 01, 2011

இந்திய பாராளுமன்றத்தில் இலங்கை சபாநாயகருக்கு எதிராக அதிமுக போராட்டம்!

இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிறப்பு விருந்தினர்களாக, இந்திய பாராளுமன்ற மக்களவையில் கலந்து கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக உறுப்பினர்கள் குரல் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மக்களவை கூடியதும் பேசிய சபாநாயகர் மீராகுமார், சிறப்பு விருந்தினராக வந்திருந்த இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் சமன் ராஜபக்சே உள்ளிட்டவர்களை எம்பிக்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். மேலும் இலங்கை எம்பிக்களை, மக்களவை உறுப்பினர்கள் இன்முகத்துன் இந்தியாவிற்கு வரவேற்க வேண்டும் என்றும் மீராகுமார் கேட்டுக்கொண்டார்.

இதற்கு தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து எம்பிக்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது தம்பிதுரை எம்பி தலைமையில் எதிர்ப்பு தெரிவித்த அதிமுக உறுப்பினர்கள், போர்க்குற்றம் சாட்சியில் சிக்கியிருக்கும் இலங்கை பிரதிநிதிகள் இந்திய நாடாளுமன்றத்தில் இருக்கக் கூடாது என்றனர்.

உறுப்பினர்களின் எதிர்ப்பால் சபாநாயகர் மீராகுமாரால் உரையை வாசிக்க முடியவில்லை. விருந்தினர்களை வரவேற்று உபசரிப்பதுதான் இந்தியர்களின் கலாச்சாரம் என்று மீராகுமார் கூறியதையடுத்து உறுப்பினர்கள் அமைதியாகினர்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.