Sunday, July 31, 2011

குற்றச் சாட்டுகள் தொடர்பில் உரிய விசாரணைகளை நடத்துவதன் மூலம் தமிழ் மக்களின் இதயங்களை வென்றெடுக்க முடியும்: இந்திய கம்யூனிச கட்சியின் செயலாளர் பிரகாஷ் கரட்

குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உரிய விசாரணைகளை நடத்துவதன் மூலம் தமிழ் மக்களின் இதயங்களை வென்றெடுக்க முடியும் என இந்திய கம்யூனிச கட்சியின் செயலாளர் பிரகாஷ் கரட் தெரிவித்துள்ளார்.மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சுயாதீனமானதும், பக்கச்சார்பற்றதுமான உயர்மட்ட விசாரணைகள் நடத்தப்பட வேண்டியது மிகவும் அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வடக்கு கிழக்கில் இராணுவ நிர்வாகம் களையப்பட வேண்டும் எனவும், அவசரகாலச் சட்டம் நீக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். யாழ்ப்பாணத்தில் மட்டுமன்றி ஒட்டுமொத்த இலங்கையிலும் அதிகார ஆட்சி முறைமை நீடித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திரத்தின் பின்னர் இலங்கையில் தொடர்ச்சியாக தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகள் மறுக்கப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இடம்பெயர் மக்கள் மீள் குடியேற்றம் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

மேலும் காத்திரமான அரசியல் தீர்வுத் திட்டமொன்றை தமிழ் மக்களுக்கு பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் அதிக சிரத்தை எடுத்துக்கொள்ள வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.