Sunday, July 31, 2011

போரில் படையினர் மேற்கொண்ட மனிதஉரிமை மீறல் களை மூடிமறைக்க அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளதாம்

இறுதிக்கட்ட போரின் போது படையினர் மேற்கொண்ட மனிதாபிமான மீட்பு பணிகள் தொடர்பாக சிறீலங்காவின் பாதுகாப்பு அமைச்சு தயாரித்த அறிக்கை நாளை சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மனிதாபிமான மீட்புபணி உண்மைசார் அறிக்கை என்ற தலைப்பில் இந்த அறிக்கை வெளியிடப்படவுள்ளது

சிறீலங்காவில் உள்ள அரசநிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளதுஜ.நாவின் நிபுணர்குழு அறிக்கைக்கு பதிலளிக்கும் நோக்கிலும் இந்தஅறிக்கை அமையுமென சிறீலங்கா அரசு அறிவித்துள்ளதுதமிழீழ விடுதலைப்புலிகன் தோற்றம் விரிவாக்கம் உள்ளிட்ட விடயங்களும் படையினரின் எதிர்ப்பு நடவடிக்கையும் தொடர்பாக விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

கடந்தகாலங்களில் சிறீலங்கா அரசு மேற்கொண்ட சமாதான முயற்சிகள் மற்றும் படையினர் மேற்கொண்ட போர்தந்துரபாயங்கள் தொடர்பாகவும் அறிக்கையில் விவரிக்கப்பட்டுள்ளதுஇறுதிக்கட்ட போர்தொடர்பான முழுமையாக விபரம் இந்த அறிக்கையில் உள்ளடங்கியுள்ளதாக சிறீலங்காவின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது இந்த அறிக்கை சிறீலங்காவில் உள்ள பன்னாட்டு தூதரகங்கள் மற்றம் உயர்அலுவலகங்களில் காட்சிப்படுத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதுகோத்தபாயறாஜபக்சவின் நேரடி நெறிப்படுத்தலில் பாதுகாப்பு அமைச்சினால் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது சிறீலங்காப்படையினர் மேற்கொண்ட படுகொலைகளை மூடிமறைத்து பன்னாடுகளுக்கு காட்டிக்கொள்ளம் செயற்பாட்டில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.