மகிந்தர் இன்று கிளிநொச்சிக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார். முன்னர் விடுதலைப் புலிகளின் பலமான கோட்டையாகவும், நிர்வாகத் தலைநகராகவும் விளங்கிய இவ்விடத்தில் மகிந்தர் சென்று தனது வாலை ஆட்டியுள்ளார். முன்னர் அவர் கலந்துகொள்ள இருந்த இக்கூட்டத்துக்கு தமிழக பாடகர்கள் வருவதாக இருந்தது. இசைவாத்தியங்கள் அனைத்தும் மேடையில் தயார் நிலையில் இருந்ததாகவும் இறுதியில் அவை அனைத்தும் அகற்றப்பட்டதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. தமிழகப் பாடகர்கள் தாம் கிளிநொச்சி செல்லமாட்டோம் என்று கூறியதை அடுத்தே இவர் தனது மகன் சகிதம் மேடையில் தோன்றி தமிழில் உரையாற்றிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார் என அதிர்வு இணையம் அறிகிறது.
ஆனால் இக் கூட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டதுதான் கவலைக்குரிய விடையமாக உள்ளது. மக்களை இராணுவம் வலுக்காட்டாயமகாக் கூட்டிச்சென்றதா இல்லை அவர்கள் தாமாகவே சென்றனரா எனத் தெரியவில்லை. இருப்பினும் மக்கள் தொகையாக இக் கூட்டத்துக்கு ஏன் செல்லவேண்டும் என பொதுமகன் ஒருவர் விசனம் தெரிவித்தார்.

0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.