யாழ் அளவெட்டியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளூராட்சி வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் கூட்டத்தில் இராணுவத்தால் நடாத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக கடும் கண்டனம் தெரிவித்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மேலும் அறிக்கையில்:-
கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டை மாறி மாறி ஆட்சி செய்துவந்த அரசாங்கங்கள் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளுக்கு எதிராக இராணுவத்தை கட்டவிழ்த்து வந்துள்ளது என்பது வரலாறு.
எனவே தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளுக்கு எதிராக திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்டு வரும் இந்த மிலேச்சத்தனமான தாக்குதல்களை கண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பு எந்த சக்திகளுக்கும் அடிபணியப் போவதுமில்லை, அஞ்சப்போவதுமில்லை.
வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் நியாயமன அபிலாசைகளை அரசில் ரீதியாக வென்றெடுக்க தமிழ் மக்களின் ஒரே கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஐனநாயகத்தின் குரல்வளையை நசுக்கும் நோக்குடனேயே திட்டமிட்டு இராணுவம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. என்பதை சர்வதேசம் உணர்ந்து கொள்ளவேண்டும்.
அதேவேளை நடைபெறவிருக்கின்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு போட்டியிடுகின்ற அனைத்து சபைகளிலும் வெற்றிபெற்று தமிழ்தேசியக் கூட்டமைப்பு தான் தமிழ் மக்களின் ஏகபிரதிநிதி என்பதை இந்த அராஐககாரருக்கு இந்த தேர்தல் மூலம் தமிழ் மக்கள் பாடம் புகட்டவேண்டும்.
இப்போது நடைபெற்ற ஒரு மிலோச்சத்தனமான அரசியல் நாகரிகமற்ற தாக்குதலையிட்டு கடும் கண்டனம் தெரிவிப்பதுடன் இத்தாக்குதல் சூத்திரகாரர்களுக்கு எதிராக அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
அதைவிடுத்து தாக்குதலை நடாத்திவிட்டு அவர் இல்லை இவர் என இராணுவத்தினர் மாறி மாறி அறிக்கை விடுத்து தமிழ் மக்களை இராணுவ மேலாதிக்கத்தில் வைக்க முற்படுகின்றது என்பது தெட்டத்தெளிவாக தென்படுகின்றது என அவ் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.