Monday, June 13, 2011

இலங்கை மீது சர்வதேச அழுத்தம் – மஹிந்த செவ்வாயன்று ரஷ்யாவுக்கு விஜயம்!

இலங்கை இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்குற்ற விவகாரம் சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச­ எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ரஷ்யாவுக்கு விஜயம் செய்யவுள்ளார் .

இந்த விஜயத்தின்போது போது அவர் அந்நாட்டு ஜனாதிபதி டிமிற்றி மெட்வெடோவைச் சந்தித்து பேச்சு நடத்துவார் என ஆங்கில ஊடகமொன்று நேற்று செய்திவெளியிட்டிருந்தது. ஐ.நா. நிபுணர்குழுவின் அறிக்கைக்கு அமெரிக்கா, பிரிட்டன் உட்பட பல நாடுகள் ஆதரவு தெரிவித்திருந்தன.

இருந்தும் ரஷ்யா,சீனா
ஆகிய வீட்டோ அதிகாரமுடைய நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக செயற்பட்ட வண்ணமுள்ளன. எனவே,இந்த விவகாரம் தொடர்பில் ஆதரவு தெரிவித்ததற்காக அவர் ரஸ்யாவுக்கு நன்றி தெரிவிக்கப் போவதாகவும் அரச வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

அதேவேளை, சென்பீற்றர்ஸ்பேர்க்கில் (லெனின்கிராட்) நடைபெறவுள்ள அனைத்துலக பொருளாதார மன்றத்தின் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளநாடுகளின் தலைவர்களை சந்தித்துப் பேசுவதற்கு மகிந்த ராஜபக்ச திட்டமிட்டுள்ளார் என்றும் கூறப்படுகின்றது.

இந்தக் கூட்டம் எதிர்வரும் 16 ஆம் திகதி தொடக்கம் 18 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் சீன ஜனாதிபதி ஹு ஜின்டாவோவும் கலந்து கொள்ளவுள்ளார் என்பது குறிப்படத்தக்கது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.