தமிழீழ விடுதலைப்புலி ஆதரவாளர்களால் ஏற்படுத்தப்படும் அனைத்துலக அழுத்தங்களை எதிர்த்து நிற்க தவறினால் எமக்கு கிடைத்தவெற்றியும் நமது நாடும் கைநழுவிப் போய்விடும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். புலி ஆதரவாளர்கள் சிறிலங்கா படையினருக்கு எதிரான காணொளி காட்சிகளை தயாரித்து அனைத்துலகத்திடம் முன்வைத்துள்ளனர்.
இதன் மூலம் நமக்கு கிடைத்தவெற்றி கேவலப்பட்டு போயுள்ளது எனவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் தமிழ் கூட்டமைப்பினர் மீது நடத்தப்பட்டதாக்குதல் காவல்துறையினருக்கு அறிவிக்கப்படாமல் நேரடியாக அமெரிக்கத் தூதரகத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் முதலாவதாக அமெரிக்கத் தூதரகத்திலேயே விசாரிக்கப்பட்டும் உள்ளது என்றும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.