Thursday, June 09, 2011

சட்டப்பேரவையில் தீர்மானம் – வைகோ வரவேற்பு!

இலங்கை மீது மத்திய அரசு பொருளாதாரத் தடை விதிக்க வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு மதிமுக பொதுச்செயலர் வைகோ வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இலங்கையில் ஈழத் தமிழர்களைப் படுகொலை செய்த இலங்கை அரசு மீது, ஐ.நா. சபை போர்க் குற்றவாளி என்று அறிவித்து, விசாரணை நடத்த வேண்டும் என்றும், அதற்கு இந்திய அரசு ஐ.நா. சபையை வற்புறுத்த வேண்டும் என்றும், மேலும் தமிழர்களுக்கு இலங்கை அரசு துன்பம் விளைவிப்பதைத் தடுக்கவும் தமிழர்களுக்குப் பாதுகாப்பான நிலை ஏற்படுத்தவும் இலங்கை அரசு மீது பிற நாடுகளோடு சேர்ந்து இந்திய அரசும் பொருளாதாரத் தடை கொண்டு வர வேண்டும் என்றும், தமிழ்நாடு சட்டமன்றத்தில் தமிழக முதல்வர் கொண்டு வந்த தீர்மானம் மிகவும் வரவேற்கத் தக்கதாகும்.

சட்டமன்றத்தில் ஒருமனதாக இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது, தமிழகத்திலும் உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கும் நம்பிக்கை ஊட்டுகிறது. இவ்வாறு வைகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.