Saturday, June 11, 2011

தமிழக முதல்வர் தெரிவித்த கருத்துகள் குறித்து மூச்சு விடாத இந்திய உயர்மட்டக் குழு

இலங்கை தொடர்பாக தமிழக சட்டசபை அண்மையில் நிறைவேற்றிய தீர்மானங்கள் குறித்து இலங்கை அரசாங்கத்துக்கும் இந்திய அரசின் உயர் மட்ட தூதுக்குழுவும் இடையிலான பேச்சுவார்த்தைகளின்போது கலந்துரையாடப்படவில்லை என இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் இந்திய ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

நல்லிணக்க விடயத்தில்,கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு எனும் சொந்த பொறிமுறையொன்றை இலங்கை கொண்டிருப்பதாகவும். ஆதனால் ஐ.நா. நிபுணர்குழுவின் அறிக்கை குறித்து கலந்துரையாடப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை,இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் அமைக்கப்படும் இடம்பெயர்ந்த மக்களுக்கான வீடமைப்புத் திட்டத்தின்கீழ் 50 வீடுகள் இம்மாத இறுதிக்குள் பூர்த்தி செய்யப்படுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் 1000 வீடுகளை இவ்வருட இறுதிக்குள் பூர்த்தியாக்கப்படும் எனவும் இந்திய வெளிவிவகார செயலாளர் நிருபமா ராவ் தெரிவித்தார்.

நேற்று இலங்கைக்கு வந்த இந்திய தூதுக்குழுவினர் இன்று சனிக்கிழமை இலங்கையிலிருந்து புறப்பட்டுச் சென்றமை குறிப்பிடத்தக்கது

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.