Saturday, June 11, 2011

மஹிந்தரைச் சந்தித்த இந்திய உயர்மட்டக் குழு!

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு கொழும்பு வந்துள்ள இந்திய உயர்மட்டக்குழு இன்று பிற்பகல் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளது.

இந்திய உயர்மட்டக் குழுவினருடனான சந்திப்பு ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது.

இச்சந்திப்பில் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன், இந்திய பாதுகாப்புச் செயலாளர் பிரதீப் குமார், இந்திய வெளியுறவுச் செயலாளர் நிருபமா ராவ் ஆகியோருடன் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க, பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ, இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் காந்தா மற்றும் வெளிவிவகாரச் செயலாளர் கருணாதிலக அமுனுகம ஆகியோர் கலந்து கொண்டனர்.


அதேவேளை இந்திய உயர்மட்டக்குழுவினருக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் இன்று காலை 10.30 மணி தொடக்கம் நண்பகல் 12 மணிவரை சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பின் போது வடக்கு கிழக்கில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் உடனடித் தேவைகள், வடக்கு கிழக்கு காணி, வணக்கஸ்தலங்கள், கலாச்சார நிலங்கள் தொடர்பாகவும், எல்லோராலும் ஏற்றுக் கொள்ளக்கூடியதும் நிலைத்து நிற்கக்கூடிய அரசியல் தீர்வு தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.