Saturday, June 11, 2011

இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் இந்தியாவை ஏமாற்ற டக்ளஸ் சதி!

இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டிருக்கும் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் தலைமையிலான குழுவினருடன் டக்ளஸ் தொலைபேசி மூலம் கலந்துரையாடியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன் போது இனப்பிரச்சினை தொடர்பில் அமைச்சர் கருத்துத் தெரிவிக்கையில், இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் நாடாளுமன்ற தெரிவுக்குழு ஒன்றை அமைப்பது குறித்த ஆலோசனையை டக்ளஸ் முன்வைத்து இந்தியாவின் அரசியல் தீர்வு முயற்சியினை இழுத்தடித்து குழப்பும் ஒரு திட்டத்தை முன்வைத்ததாக தெரியவருகிறது.

எதிர்வரும் அரசாங்கத்துடனான ஈ.பி.டி.பி. கட்சியின் பேச்சுவார்த்தையின் போது இந்த ஆலோசனையை முன்வைக்க இருந்ததாகவும் இந்திய தூதுக்குழு இலங்கைக்கு வந்திருக்கும் நிலையில் இதனை முன்வைப்பதாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடமும் இந்த ஆலோசனை முன்வைக்கப்படுமென தெரிவித்துள்ள டக்ளஸ் நாடாளுமன்ற தெரிவுக்குழு அமைப்பதன் மூலம் சகல தரப்பினரும் அதில் அங்கம் வகிக்கக் கூடிய சூழ்நிலை உருவாகுமெனவும் தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் தமிழ் தேசிய கூட்டமைப்பை தான் பின்வாசலால் கையகப்படத்தி அனைத்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் தனது கட்டுபாட்டில் கொண்டு வந்து இந்தியாவை ஓரங்கட்ட டக்ளஸ் முயன்றதாக தெரியவருகிறது.

எனவே இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் தடைகளற்ற நிலையில் தீர்வினை இத்தூதுக்குழுவின் மூலம் பெற்றுக் கொள்ள முடியுமென்றும் இத்தெரிவுக் குழுவானது குறிப்பிட்ட ஒரு கால அவகாசத்திற்கு உட்பட்டதாக அமைக்கப்பட வேண்டுமெனவும் டக்ளஸ் தனது சிங்கள எஜமானார் கொடுத்த திட்டத்தை தனது திட்டமாக இந்தியாவுக்கு தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ஸ தனது இரகசிய திட்டத்தை டக்ளஸ் ஊடாக இந்தியாவுக்கு தெரியப்படுத்தியதாக இரகசிய வட்டாரங்கள் எமக்கு தெரிவித்தன.

1 comment:

  1. பின்கதவால் அரசின் கால் நக்கி அமைச்சர் பதவிக்கு வந்தவனுக்கு தமிழரைப்பற்றிய கவலை ஏன்? ஈழத்தமிழரின் அவலங்களுக்கு இந்த கூலிக்குழுத்தலைவனும் ஒரு காரணம்.

    ReplyDelete

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.