Friday, June 10, 2011

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயல‌லிதா அவர்களுக்கு நாம்தமிழர் கனடா அமைப்பு நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ளது.

சிறீலங்கா இனவெறி ஆட்சியாளர்களைப் போர்க்குற்றவாளிகளாக அறிவிக்கக்கோரியும், சிறீலங்காவிற்கு எதிராகப் பொருளாதாரத் தடையைக்கொண்டுவரக்கோரியும் இந்திய மத்தியஅரசை வலியுறுத்தி தமிழகச் சட்டசபையில் ஏகமனதாகத் தீர்மானமியற்றிய மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயல‌லிதா அவர்களுக்கு நாம்தமிழர் கனடா அமைப்பானது தங்களின் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றது.

இவ்வரலாற்றுச் சிற‌ப்புமிக்க தீர்மானத்தை தமிழகச் சட்டசபையில் நிறைவேற்றியதன்மூலம் தமிழக முதல் அமைச்சர் அவர்கள் உலகத்தமிழர்களின் ஒப்பற்ற தலைவராக மீண்டுமொருமுறை நிரூபித்துக் காட்டியுள்ளார்கள்.

திக்குத்திசைதெரியாது நாதியற்ற‌வர்களாக துன்பத்தில் துவண்டுபோயிருந்த ஈழத்தமிழர்களுக்கு இத்தீர்மானமானது ஓர் நம்பிக்கை ஒளியைக் கொடுத்திருக்கின்றது. கொடுங்கோலன் இராசபக்சாவின் இனப்படுகொலைக்குத் துணையாக நின்ற கோடரிக்காம்பு கருணாநிதியின் துரோகங்களைத் தமிழகச்சட்டசபையில் தோலுரித்துக் காட்டிய துணிவைப் பாராட்டுவதற்கு வார்த்தைகளே இல்லை.

முதலமைச்சர் அவர்கள் இத்தீர்மானத்தோடு நின்றுவிடாமல் அகில இந்திய அளவில் ஈழத்தமிழர்களின் இனப்படுகொலையை கொண்டுசென்று நிலையான ஒரு விடுதலையை தொப்புழ்கொடி உறவுகளாகிய ஈழத்தமிழர்களுக்குப் பெற்றுக்கொடுக்குமாறு நாம்தமிழர் கனடா அமைப்பானது வேண்டிநிற்கின்றது.

நாம் தமிழர்
கனடா

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.