விடுதலைப்புலிகளுக்கெதிரான யுத்தத்தில் ஏனைய நாடுகளும் உதவிகளை புரிந்த போதிலும் இந்தியா மட்டுமே மிகுந்த செல்வாக்கை செலுத்த முடியும் என தாம் நம்பியதாகவும், யுத்த வெற்றிக்கு இந்தியாவின் பங்கு அளப்பரியது என்றும் சிறிலங்காவின் பாதுகாப்பு செயலாளர் கோதபாய ராசபக்ச நேற்று இராணுவத்தின் யுத்த வெற்றியின் அனுபவ பகிர்வு என்ற கருத்தரங்கை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையில் தெரிவித்துள்ளார். கொழும்பு கலதாரி ஹொட்டலில் ஆரம்பமான இக்கருத்தரங்கில் இந்தியா பாகிஸ்தான் உட்பட 43 நாடுகளைச்சேர்ந்த பாதுகாப்பு, மற்றும் இராணுவ உயரதிகாரிகள் இதில் கலந்து கொள்கின்றனர்.
இந்தியா இந்த மாநாட்டிற்கு மூன்று இராணுவ உயர்அதிகாரிகளை அனுப்பியுள்ளது. விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தம் இடம்பெற்ற வேளையில் சர்வதேச அழுத்தங்கள் இருந்த போதிலும் தமது அரசியல் தலைமை கையாண்ட விதமே இராணுவ வெற்றிக்கு காரணமாக அமைந்ததாகவும் கோதபாய ராசபக்ச தெரிவித்தார். சிறிலங்கா அரச தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தவறான புரிந்துணர்வுகளை தவிர்ப்பதற்காக யுத்த முன்னேற்றங்களை இந்தியாவுக்கு தெளிவுபடுத்த முழு முயற்சிகளை மேற்கொண்டார் என பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தெளிவானதொரு உயர்மட்ட தொடர்பாடல்கள் மூலம் இரு நாடுகளுடன் மகிந்த ராஜபக்ச தொடர்பினை ஏற்படுத்திக் கொண்டு பெருமைப்படக் கூடிய ஒருவிடயம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஒருசில நாடுகள் இராஜதந்திர, பொருளாதார அழுத்தங்களை சிறிலங்கா மீது பிரயோகிக்க முயல்கின்ற போதும் இந்தியாவினால் மாத்திரமே சிறிலங்காவின் இராணுவ நடவடிக்கையில் செல்வாக்கு செலுத்த முடியும் எனவும் அவர் மேலும்தெரிவித்துள்ளார்.

0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.