இலங்கை பாதுகாப்பு படையினரால் தடுத்துவைக்கப்பட்டிருந் தமீழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் அரசியல்துறை பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வனின் மனைவி சசிரேகாவும் அவரின் இரு பிள்ளைகளும் நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
சு.ப.தமிழ்ச்செல்வன் 02.11.2007 ஆம் திகதி இலங்கை விமானப்படையின் குண்டுத்தாக்குதலில் பலியானார். அவரின் மனைவியும் பிள்ளைகளும் யுத்ததத்தின் இறுதிக்கட்டத்தில் வவுனியா அகதிகள் முகாமுக்கு இடம்பெயர்ந்தமை குறிப்பிடத்தக்கது.
இவர்களை விடுதலை செய்யவுள்ளதாக அரசங்கம் அறிவித்துள்ள போதும் இவர்கள் எந்த நிபந்தனையின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்று அரசு தெரிவிக்கவில்லை.
இதே போல் கடந்த காலங்களில் இலங்கை அரசால் விடுதலை செய்யப்பட்டிருந்த பல போராளிகளும் போராளிகளின் குடும்பத்தினரும் மீண்டும் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.