தமிழ் மக்களுக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் இல்லாத எந்தத் தீர்வையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக்கொள்ளாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
இதேவேளை, ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை குறித்து ஆராய்வதற்காக எதிர்வரும் வெள்ளிக்கிழமை இலங்கைக்கு வரும் இந்தியப் பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்தவும் தமிழ்க் கூட்டமைப்பு திட்டமிட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
கொழும்பில் இருந்து வெளியாகும் பத்திரிகை ஒன்றில் அரசுடன் நடைபெற்று வரும் பேச்சுகளின்போது காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பில் பேச்சு நடத்துவதில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது என்று ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியாகியிருந்தது.
அரசியல் தீர்வுத் திட்டம் தொடர்பாக அரசுடன் பேச்சில் ஈடுபடும் பிரதிநிதிகள் மீதும்,தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீதும் தமிழ் மக்கள் மனதில் அவ நம்பிக்கையை ஏற்படுத்துவதற்காக இவ்வாறு திட்டமிட்ட பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இதை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
அரச தரப்பினரும்,அவர்களின் சார்பு நிலை ஊடகங்களும் கடந்த காலத்திலும், இப்போதும் இவ்வாறான மூன்றாந்தர பிரசாரங்களை கட்டவிழ்த்து விடுகின்ற போதிலும் பல தசாப்தங்களாகத் தொடரும் இன முரண்பாட்டிற்காக தமிழ்மக்கள் செய்து வரும் தியாகங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் விலைபேசாது – என்று கூறினார்.

0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.