
அண்மைக் காலமாக ஏறாவூர் தமிழ் முஸ்லீம் மக்களிடையே இன விரோத நடவடிக்கைகளை தூண்டும் வகையில் செயற்பட்டு வரும் அலிசாகீர் மௌலானா இதுவரை தமிழர் பகுதியில் செயற்பட்டுவந்த இலங்கை மின்சாரசபை காரியாலயத்தை ஏறாவூர் முஸ்லீம் பிரதேசத்திற்கு மாற்றுவதற்கு எடுக்கும் முயற்சி தமிழ் மக்களை மூன்றாம் தரக் குடிமக்களாய் நடத்துகின்ற செயல் என்றும் தமிழ் கிராமங்களை பழிவாங்கும் நடவடிக்கை என்றும் ஏறாவூர் 5ஆம் குறிச்சி தமிழ் மக்கள் தெரிவிக்கின்றனர்.
ஒரு இலட்சம் தமிழர்களின் தேவைகளுக்காக ஏறாவூர்-05ம் குறிச்சி நல்லதம்பி வீதியில் இயங்கிவரும் இலங்கை மின்சாரசபை காரியாலயத்தை கட்டிட வாடகை பிரச்சனை ஒன்றை காரணம் காட்டி பத்தாயிரம் முஸ்லீம் மக்கள் வாழும் ஏறாவூர் நகரசபை வளாகத்தில் அமைந்துள்ள கட்டிடமொன்றிற்கு மாற்றுவதற்கு ஏறாவூர் நகர சபை தவிசாளர் அலிசாகீர் மௌலானா முயற்சித்து வருவதாகவும் ஆனால் இதனை விட்டுக்கொடுக்க விரும்பாத ஏறாவூர் பத்திரகாளியம்மன் ஆலய நிர்வாக சபை ஒரு வருடத்திற்கு எந்தவித வாடகையும் இல்லாமல் இருந்த இடத்திலேயே மின்சார சபை இயங்கலாம் என ஒத்துக்கொண்டதுடன் தங்களது ஆலயக் காணியிலேயே மின்சாரசபை அமைப்பதற்கு காணி ஒதுக்கித்தருவதாகவும் ஒப்புக்கொண்டுள்ளனர்.
ஆனால் இவற்றையெல்லாம் பொருட்படுத்தாத அலிசாகீர் மௌலானா தொடர்ந்து தனது செல்வாக்கை பயன்படுத்தி இதனை மாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார். இச் செயலுக்கு இப்பிரதேச தமிழர்களால் தெரிவு செய்யப்பட்ட நகர சபை உறுப்பினர் பூ.சசிகரனும் துணைநிற்பதாக தமிழ் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இச் செயலைக் கண்டித்து ஏறவூர் பற்று பிரதேசத்தில் உள்ள அனைத்துத் தமிழ் போது அமைப்புக்களும் தங்களுடைய எதிர்ப்புக் கடிதங்களை திருகோணமலை மாகாண காரியாலயத்திற்கும் மட்டக்களப்பு மாவட்ட காரியாலயத்திற்கும் தமிழ் அரசியல் தலைவர்களுக்கும் அனுப்பிவைத்துள்ளனர்.
ஆனால் இதனை தடுத்து நிறுத்துவதற்கான எந்த நடவடிக்கைகளையும் இதுவரை தமிழ் அரசியல்வாதிகளோ, அரசாங்க அதிகாரிகளோ மேற்கொள்ளவில்லை என்று ஏறாவூர் 5ஆம் குறிச்சி தமிழ் கிராமமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.