Sunday, May 29, 2011

ரஸ்யா, சீனா தொடர்பான புலம்பெயர் தமிழர்களின் நடவடிக்கைகளை தடுக்க முயற்சி

ரஸ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகளுடன் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மேற்கொள்ளும் கலந்துரையாடல்களை தடுக்குமாறு சிறீலங்கா அரசை இராஜதந்திரிகளை எச்சரித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஜெனீவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்திற்கு முன்னர் ரஸ்யா, சீனா ஆகிய நாடுகளின் அதிகாரிகளை புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகள் சந்திக்கத்திட்டமிட்டுள்ளனர்.

ஆனால் அதனை சிறீலங்கா அரசு தடுத்துநிறுத்தாது விட்டால், சிறீலங்காவுக்கு பாதகமான முடிவுகள் ஏற்படலாம், ஏனெனில் சிறீலங்கா இந்த இரு நாடுகளின் ஆதரவில் தான் தங்கியுள்ளது என இராஜதந்திரிகள் சிறீலங்கா அரசை எச்சரித்துள்ளனர்.

அதுமட்டுமல்லாது, கொழும்பில் உள்ள சில அரசசார்பற்ற நிறுவனங்களின் ஆதரவுகளையும் பெறுவதற்கு புலம்பெயர் தமிழ் மக்கள் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர் என இராஜநத்திரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.

சிறீலங்கா அமைச்சர்களை போர்க்குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் வெளிநாடுகளில் வைத்து கைது செய்யவும் புலம்பெயர் தமிழ் மக்கள் முயன்று வருகின்றனர் என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.