விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக்கட்டத்தில் 40ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக, பாதுகாப்புச் சபையில் ஐ.நாவின் மனிதாபிமான விவகாரங்களுக்கான அடிநிலைச் செயலர் பரோனெஸ் வலேரி ஆமொஸ் அம்மையார் வெளியிட்ட கருத்துக்கு சிறிலங்கா அரசாங்கம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
கடந்த செவ்வாயன்று பாதுகாப்புச்சபையில் �பொதுமக்களின் பாதுகாப்பு� என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் வலேரி ஆமோஸ் அம்மையார் கூறியுள்ள இந்தக் கருத்து உறுதிசெய்யப்படாத புள்ளிவிபரங்களை அடிப்படையாகக் கொண்டது என்று சிறிலங்கா அரசாங்கம் கூறியுள்ளது.
அவரது இந்தக் கருத்து ஐ.நாவின் நிபுணர் குழுவினது அறிக்கையின் அடிப்படையிலானது- ஐ.நா பொதுச்செயலருக்கு ஆலோசனை வழங்குவதற்காக தயாரிக்கப்பட்ட அந்த அறிக்கையை தாம் நிராகரித்து விட்டதாகவும் சிறிலங்கா அரசாங்கம் கூறியுள்ளது.
சரியான தகவலைக் கொண்டிருக்கவில்லை என்பதால் ஏற்றுக் கொள்ளாத அந்த அறிக்கையை வலேரி ஆமொஸ் அம்மையார் மேற்கோள்காட்டியுள்ளதாகவும் சிறிலங்கா கூறியுள்ளது. இதுதொடர்பாக ஐ.நாவுக்கு சிறிலங்கா அரசாங்கம் கடிதம் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளது.
உணர்ச்சி வசப்பட்டு குற்றம்சாட்டியுள்ளதாகவும், ஏற்றுக் கொள்ளப்பட முடியாத தருஸ்மன் அறிக்கையின் அடிப்படையில் அவர் புள்ளிவிபரங்களை எடுத்துக் கூறியுள்ளதாகவும் அந்தக் கடிதத்தில் சிறிலங்கா அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.
ஐ.நாவின் சாசனங்களைப் பாதுகாக்கும் ஒர் ஐ.நா அதிகாரி போல் அன்றி, வலேரி ஆமொஸ் அம்மையார் ஒரு துணைவலிமை கொடுக்கும் பாத்திரத்தை வகிப்பதாகவும் சிறிலங்கா குற்றம்சாட்டியுள்ளது.
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.